அமெரிக்காவில் பிறந்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் சன்னி லியோன். முதலில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு இந்தியா வந்தவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.
பாலிவுட் அல்லாமல் கோலிவுட், மாலிவுட், டோலிவுட் என அனைத்து வுட்டுகளிலும் கலக்கி வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக சன்னிலியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளமும் உள்ளது.
தமிழில் வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். அதேபோல அண்மையில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் கதாநாயகியாக சன்னி லியோன் நடித்திருந்தார்.
இந்நிலையில், பேஷன் ஷோ நடைபெறும் பகுதயில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இன்று காலை 6.30 மணி அளவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்து உள்ளது. எனினும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அது சக்தி வாய்ந்த வெடிகுண்டு அல்லது எறிகுண்டு என எதனால் ஏற்பட்ட குண்டுவெடிப்பு என்பது பற்றி தெரியவில்லை.
இந்த சம்பவத்திற்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சன்னி லியோன் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ஒன்றில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.