கனிந்தது 8 வருட காதல்... பிக்பாஸ் பிரபலத்திற்கும், நடிகைக்கும் விரைவில் ‘டும்டும்டும்’...!

First Published | Jul 26, 2021, 12:16 PM IST

 சினேகன், கன்னிகா ரவி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

snehan

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

snehan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன், அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 

Tap to resize

snehan

தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ள சினேகனுக்கும், பிரபல நடிகையான கன்னிகா ரவியுடன் வரும் ஜூலை 29ம் தேதி அன்று திருமணம் நடைபெற உள்ளது. தன்னுடைய திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரை நேரில் அழைக்கும் வேலையில் சினேகன் பிசியாக உள்ளார். 

snehan

இந்நிலையில் சினேகன், கன்னிகா ரவி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது பாடலாசிரியர் சினேகனும், வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது அந்த காதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தலைமையில் திருமணமாக கனிய உள்ளது. இதையடுத்து கன்னிகாவை கரம் பிடிக்க உள்ள கவிஞர் சினேகனுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Latest Videos

click me!