தற்போது தைரியமான பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க போராடும் கண்ணம்மாவின் கதாபாத்திரம் இல்லத்தரசிகளை வெகுவாக கவர, சீரியலும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
farina
இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே எந்த அளவிற்கு பிரபலமோ... அதே அளவிற்கு, வில்லியாக நடித்து வரும் வெண்பாவும் மிகவும் பிரபலம் தான்.
farina
கண்ணம்மாவின் கணவரும், தன்னுடைய பாலிய நண்பருமான நாயகன் பாரதியை திருமணம் செய்து கொள்ள, இவர் செய்யும் வில்லத்தனம் எல்லாம் பார்பவர்களையே கோபமடைய செய்யும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை முரட்டு தனமாக வெளிப்படுத்தி வருகிறார். உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட, காதலி கண்ணம்மாவை தற்போது பாரதி பிரிந்திருக்க காரணமும் இந்த வில்லி வெண்பா தான்.
farina
இந்நிலையில் இவர் கடந்த வாரம் மிகவும் சந்தோஷமான செய்தி ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடைய கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஃபரீனா தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
farina
முதல் முறையாக தன்னுடைய பேபி பம்ப் தெரியும்படி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். மேலும் ஆமாம் தான் கர்ப்பமாக இருக்கிறேன். இன்னும் 3 மாதங்களில் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாகவும், தன்னுடைய 4 வருட கனவு நினைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
farina
இதை தொடர்ந்து இவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படம் கொஞ்சம் ஓவர் தான் என்கிற எண்ணத்தை வரவைத்துள்ளது.
farina
கர்ப்பமாக இருக்கும் வயிற்றில்... குழந்தை தூங்குவது போன்று மெஹந்தியால் வரைந்து கலர் ஃபுல் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார்.
farina
இந்த புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பலர் கண்ணு பட போகுது இது போல் வயிறு தெரியும்படி புகைப்படம் போட வேண்டும் என ஃபரீனாவுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.