Pushpa Movie : டப்பிங்கிலும் டாப் டக்கர் சாதனை... ரூ.100 கோடி வசூலை தட்டித்தூக்கி கெத்து காட்டிய புஷ்பா!

Ganesh A   | Asianet News
Published : Feb 01, 2022, 07:32 AM IST

தெலுங்கில் உருவான புஷ்பா திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 

PREV
15
Pushpa Movie : டப்பிங்கிலும் டாப் டக்கர் சாதனை... ரூ.100 கோடி வசூலை தட்டித்தூக்கி கெத்து காட்டிய புஷ்பா!

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்த படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டிருந்தது.  

25

இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், செம்மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் மாஸ் காட்டி இருந்தார். இதுதவிர அனசுயா, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது நடிகை சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் தான். இந்த பாடலுக்காகவே படம் பார்த்தவர்கள் ஏராளம்.

35

இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த டிசம்பர் 17-ந் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இப்படம் உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

45

தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இப்படம் இந்தியில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. அதன்படி இதன் இந்தி டப்பிங் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

55

பிறமொழி படம் ஒன்று இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரூ.100 கோடி வசூலை எட்டுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் முதல்பாகம் இந்தியில் ரூ.117 கோடி வசூலித்தது. தற்போது அதற்கு அடுத்த இடத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா உள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories