தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான, விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சியில் கட்டழகை காட்டி ரசிகர்களை அசர வைத்து வருகிறார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த, ஸ்ரேயா தெலுங்கில் இஷ்டம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக இவர் நடித்த சந்தோஷம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கிய இவர், தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும், ஹீரோயினுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எனவே, தமிழில் இவர் எதிர்பார்த்த ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்காததால்... ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.
பின்னர் 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் கவர்ச்சி புயலாக மாறி நடித்திருந்த 'மழை' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே... தமிழ் ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.
இதை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களை மட்டுமே டார்கெட் செய்து நடித்து வந்த ஸ்ரேயா, தனுஷுக்கு ஜோடியாக திருவிளையாடல் ஆரம்பம், ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி தி பாஸ், விஜய்க்கு ஜோடியாக அழகிய திருமகன், விக்ரமுக்கு ஜோடியாக கந்தசாமி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
35 வயதை எட்டிய பின்னர், இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் சுதாரித்து கொண்ட ஸ்ரேயா, Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
கொரோனா சமயத்தின் போது, சொல்லாமல் கொள்ளாமல் குழந்தந்தைக்கும் தாயான ஸ்ரேயா... தற்போது வரை குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறார்.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும், தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா... அவ்வப்போது கண்ணை கவரும் விதமாக கவர்ச்சி போட்டோ ஷாட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஸ்ரேயா சரண், பாலிவுட் இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் விதமாக... கவர்ச்சி கொந்தளிக்கும் வகையில் ஷர்டை கழட்டி கிக் ஏற்றியுள்ளார். இவரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரேயா நடித்து சமீபத்தில் ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.