சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார். தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார்.
இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் நடிகை ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஹீரோயின் வாய்ப்பிற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது கிழிஞ்ச ஜீன்ஸும், பிங்க் நிற மேலாடையும் அணிந்தபடி அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் இந்த புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.