குறுகிய நாட்களிலேயே தன்னுடைய அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா
கீதா கோவிந்தம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இல்லாது தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் நாகையாக அறிமுகமானார்.
ஏற்கனவே, கன்னடம், தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், பாலிவுட் திரையுலகிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிக்கா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடுவது, மற்றும்... அவ்வப்போது கண்ணை கவரும் உடையில் பளீச் போஸ் கொடுத்து மனதை வசீகரித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பர்புல் நிறத்தில் முழுக்கால்களும் தெரியும் அளவிற்கு கட்டிங் உள்ள மாடர்ன் உடை அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்துள்ளது.