துளியும் கவர்ச்சி காட்டாமல்... அழகால் கவரி வீசும் நிவேதா பெத்துராஜ்..! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!!

First Published | Sep 13, 2021, 3:15 PM IST

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சித்து வந்த, நிவேதா பெத்து ராஜ் தற்போது அழகிய சல்வாரில் விதவிதமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.

Tap to resize

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார்.

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் அவ்வப்போது துளியும் கவர்ச்சி காட்டாத அளவிற்கு சல்வாரிலும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

லாக் டவுன் நேரத்தில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிவேதா பெத்துராஜ் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

அதிலும் முன்பு தேர்வு செய்த படங்களை விட அழுத்தமான கதை களம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளார்.

இதனால் தன்னுடைய கவர்ச்சியை குறைத்து கொண்டு, அழகில் கவரி வீசும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்கிறார்.

Latest Videos

click me!