தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள நிதி அகர்வால் 'முன்னா மைகேல்' என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர்.
இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'பூமி' மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி... இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.
இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்... இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.
அவ்வப்போது ரசிகர்கள் மனதை குளிர வைக்கும் விதமாக விதவிதமான போட்டோ சூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிதி அகர்வால் தற்போது அதீத கவர்ச்சியில் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பார்த்தாலே ரசிகர்களுக்கு ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் விதத்தில் இவரது லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்புகள் உள்ளது.
அம்மணியின் அதீத கவர்ச்சிக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தாராளமாக தங்களது லைக்குகளை போட்டு வருகிறார்கள்.