பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.
இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார் மாளவிகா மோகனன்.
அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு கடற்கரையில் வெள்ளை நிற கவர்ச்சி உடை அணிந்தவாரு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பளீச் என தெரியும் தொடை அழகை மொத்தமாக காட்டி கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள இணையத்தில் படு வைரலாகி வருகிறது.