பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப், சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.
இவர் கைவசம் பாலிவுட்டில் தற்போது சல்மான் கானின் டைகர் 3 மற்றும் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் உள்ளன. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார்.
பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் கத்ரீனாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கத்ரீனா.
கத்ரீனா (Katrina) - விக்கி (Vicky Kaushal) ஜோடியின் திருமணம் கடந்தாண்டு டிசம்பர் 9 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் , உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் மிக பிரமாண்டமாக நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடித்து வந்த கத்ரீனா கைப் தற்போது தனது கணவர் விக்கி கெளஷலுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் தினமும் பதிவிட்டு வருகிறார் கத்ரீனா. அந்த வகையில் தற்போது பிகினி உடை அணிதவாரு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கத்ரீனா.
திருமணத்துக்கு பின்னும் கவர்ச்சி குறையாமல் நடிகை கத்ரீனா கைப் போஸ் கொடுத்துள்ளதைப் பார்த்த ரசிகர்கள், அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.