பெண்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கும் அசத்தல் திட்டம்.. வெளியான முக்கிய தகவல்!

First Published | Jan 9, 2025, 3:51 PM IST

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பீமா சகி யோஜனா திட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாத உதவித்தொகை மற்றும் கமிஷன் வழங்கப்படும்.

Bima Sakhi Yojana

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள், எல்.ஐ.சியின் பீமா சகி யோஜனா திட்டத்திற்கு 50,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். பெண்கள் அதிகாரமளித்தல் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு முயற்சியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு இதுவரை 52,511 ஆகும், இதில் 27,695 பீமா சகிகளுக்கு பாலிசிகளை விற்பனை செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் 14,583 பீமா சகிக்கள் பாலிசிகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர் என்று எல்.ஐ.சி புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Bima Sakhi Yojana

இந்த வளர்ச்சி குறித்து பேசிய எல்.ஐ.சி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த்த மொஹந்தி, "நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு வருடத்திற்குள் குறைந்தது ஒரு பீமா சகியைக் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்" என்று தெரிவித்தார்..

Tap to resize

Bima Sakhi Yojana

தொடர்ந்து பேசிய அவர் எல்.ஐ.சி, பெண்களுக்கு பொருத்தமான திறன்களை வளர்த்து, வலுவான டிஜிட்டல் கருவிகள் மூலம் அவர்களை மேம்படுத்துவதன் இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இந்தத் திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட வணிகத்தில் கிடைக்கும் கமிஷனுடன் கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையின் நன்மையும் அடங்கும் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு பீமா சகிக்கும் முதல் ஆண்டில் ரூ.7,000, இரண்டாம் ஆண்டில் ரூ.6,000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ரூ.5,000 மாத உதவித்தொகை வழங்கப்படும்.

Bima Sakhi Yojana

இந்த உதவித்தொகை அடிப்படை ஆதரவு உதவித்தொகையாக செயல்படுகிறது. கூடுதலாக, பெண் முகவர்கள் அவர்கள் பெறும் காப்பீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் கமிஷன்களைப் பெறலாம், மேலும் அவர்கள் கொண்டு வரும் வணிகத்திற்கு ஏற்ப அவர்களின் வருவாய் அதிகரிக்கும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பீமா சகிகளை நியமிக்க எல்ஐசி இலக்கு வைத்துள்ளது. 10 ஆம் வகுப்பு கல்வியை முடித்த 18 முதல் 70 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

Latest Videos

click me!