Television
Sep 21, 2018, 4:48 PM IST
இன்று ப்ரோமோவில், ஐஸ்வர்யாவால் ஜனனியின் காலில் பலத்த காயம் ஏற்படுகிறது. உடனே ரித்விகா அவருடைய கால்களை பிடித்து ரத்தம் வராமல் பாதுகாக்கிறார். இதனால் கடுப்பான பாலாஜி ஐஸ்வர்யாவிடம் 'விளையாட தெரிந்தால் விளையாடு இல்லையென்றால் வெளியே போ என கூறுகிறார்' இதற்கு ஐஸ்வர்யா நான் விளையாடாமல் விடமாட்டேன் என கூறுகிறார். பின் பாலாஜி அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது, நீங்கள் ரூல்ஸ் பிரேக் பண்றீங்க என கத்துகிறார். இதற்கு விஜி கத்தாதே என தன்னுடைய கோபத்தை காட்டுகிறார். கத்துவேன் என மிகவும் திமிராக பேசுகிறார் ஐஸ்வர்யா. பின் ஜனனியை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் கட்சியும் காட்டப்படுகிறது. ஐஸ்வர்யா இப்படி நடந்து கொண்டுள்ளதால் ஜனனியின் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.