Television
Nov 13, 2018, 10:03 AM IST
இந்தியில் பிரபல நடிகராக திகழ்பவர் சயப் அலி கான். பிரபல கிரிக்கெட் வீரரான நவாப் அலிகான் பட்டோடியின் மகன் இவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான நெட்பிலிக்ஸ் ஒரிஜினல் சீரிஸ் சாக்ரேட் கேம்ஸ் பெறும் வெற்றி பெற்றது. இதில் நடித்ததால் சயப் அலி கான் நடிக்க தெரிந்த நடிகர் என்கிற பெயரை பெற்றார். இவரது முதல் மனைவி அம்ரிதா சிங். 1991ம் ஆண்டு அம்ரிதாவை காதலித்து சயப் அலிகான் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சாரா அலிகான் என்கிற மகள் உண்டு. இவர் விரைவில் கேதார்நாத் எனும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் சயப் அலிகான் தனது மகள் சாரா அலிகானுடன் இணைந்து இந்தியில் பிரபல டிவி நிகழ்ச்சியான காஃபி வித் கரனில் பங்கேற்றனர். அப்போது தொகுப்பாளரான இயக்குனர் கரன் ஜோகர், நடிகர் சயப் அலிகானின் 2வது மனைவி கரீனா கபூர் குறித்து கேள்வி எழுப்பினார். அதிலும் கரீனாவின் ஜிம் மிகவும் செக்சியாக இருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் என்று சயப் அலிகானிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு தனது மகள் அருகில் இருக்கிறார் என்பதை கூட பொறுத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் கரீனா ஜிம்முக்கு செல்லும் போது அவர் உடல் அமைப்பு எப்படி இருக்கிறது? அவர் வந்த பிறகு அவர் உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்பது எனது வழக்கம் என்று சயப் அலிகான் பதில் அளித்தார். இதனால் சற்று கூச்சம்அடைந்த சயப்பின் மகள் சாரா அலிகான் தனது காதுகளை மூடிக் கொண்டார்.
வயது வந்த மகளை அருகில் வைத்துக் கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் அமைப்பு குறித்து பேசிய நடிகர் சயப் அலிகான் செயலால் ரசிகர்கள் முகம் சுழித்தனர்.