பொங்கல் வெளியீட்டு படங்களை FDFS பார்க்க ஆர்வமா?-சென்னைவாசிகளே முதல் 1000 பேருக்கு ஓரியோ வழங்கும் அதிரடி பரிசு!

By Dinesh TG  |  First Published Jan 12, 2024, 4:09 PM IST

பிக் பாஸ்கெட்டில் பிரத்தியேகமாக கிடைக்கும் பொங்கல் சிறப்பு சினிமா சார்ந்த ஓரியோ லிமிடெட் எடிஷன் கருப்பு மற்றும் வெள்ளை பேக்குகள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளாக இருக்கலாம்.


தை பொங்கல் நெருங்கிவிட்டது. பொங்கல் திரைப்படங்கள் திரையரங்குகளில் வருவதால், பெரிய ஹீரோக்களின் மோதல்களும் இருக்கும். திரைப்படங்கள் இல்லாமல் பொங்கல் திருநாளை கொண்டாட முடியுமா? டிவியில் கிளாசிக் படங்களை பார்ப்பதா அல்லது தியேட்டர்களில் பெரிய ஹீரோக்களின் படங்களை கைதட்டி பார்ப்பதா?

மாட்டுப் பொங்கல் திருநாள் உற்சாகத்தை போலவே, மெகா ஸ்டார்களின் நேருக்கு நேர் மோதும் படங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஸ்டார்கள் மோதும்போதும், தீவிர ரசிகர்கள் தங்களுடைய ஹீரோக்களின் பெரிய கட்அவுட்களுக்கு பால் ஊற்றி அபிஷேகம்செய்தும் பொங்கல் கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.

ரசிகர்கள் தங்களது ஹீரோகள் நடித்த படங்களின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பொங்கலுக்கு உங்களுக்குப் பிடித்த திரைப்படத்திற்கான டிக்கெட்டை வாங்குவதற்கு அதிக உற்சாகம் தேவைப்படலாம். நீண்ட விடுமுறையுடன் கூடிய பண்டிகைக் காலத்தில் டிக்கெட்டுகளும் அமோகமாக விற்கப்படுகின்றன.

கள்ளச்சந்தையில் விற்கப்படும் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், திரைப்படப் பிரியர்களுக்குப் பிடித்தமான படங்களைப் பார்க்கும் வாய்ப்பையும் பறிக்கிறது. பொங்கல் படங்கள் வெளியீடுகளுக்கான கடைசி டிக்கெட்டுகளை தவறவிட்டதன் வலியை உங்களில் சிலர் ஏற்கனவே உணர்ந்திருப்பீர்கள். டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால், நீங்கள் உண்மையில் இருக்கையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு வேண்டுமா..? ஓரியோ உங்கள் பிரார்த்தனைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கிறது. இந்த பொங்கல் திருநாளில் ஒரு புதுமையான கருப்பு மற்றும் வெள்ளை பாக்கெட்டுடன் வெளிவருகிறது. ஓரியோ இந்த பொங்கல் திருநாள் மகிழ்ச்சியிலும் சுவையிலும் பார்வையாளர்களை மூழ்கசை செய்து விழாவை சிறப்பாக கொண்டாட உதவுகிறது.

ஓரியோவின் உதவியுடன், உங்களுக்குப் பிடித்த பெரிய ஸ்டார் படங்களின் முதல் நாள் முதல் காட்சியை நீங்கள் பார்க்கலாம். ஓரியோவின் பாக்கெட்டுகளை திரைப்பட டிக்கெட்டுகளாக மாற்றுவதன் மூலம் ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பிக் பாஸ்கெட்டில் பிரத்தியேகமாக கிடைக்கும் பொங்கல் சிறப்பு சினிமா சார்ந்த ஓரியோ லிமிடெட் எடிஷன் கருப்பு மற்றும் வெள்ளை பேக்குகள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகளாக இருக்கலாம். இதன் மூலம், முதல் 1000 ஓரியோ ரசிகர்கள் சென்னையில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு ஓரியோ திரைப்படக் காட்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த பிரத்யேக சலுகை ஏற்கனவே தொடங்கப்பட்டு ஜனவரி 9 ஆம் தேதி முடிவடைகிறது.

ஓரியோ லிமிடெட் எடிஷன் பிளாக் அண்ட் ஒயிட் பேக் உண்மையான கோலிவுட் ஸ்டைலில் பால் போஸ்டர் வாஷ் உடன் வெளியிடப்பட்டது. 45 வினாடிகள் கொண்ட ஓரியோ வீடியோவில், கொண்டாட்டத்தின் சூழ்நிலையை படம்பிடித்த இந்த வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

கோலிவுட் நட்சத்திரங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களை பொங்கல் ஜுரம் வாட்டும் நிலையில், திரைப்பட டிக்கெட்டுகளை கள்ளச் சந்தைப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அதே வேளையில் திருவிழாவை ரசிக்க வைக்கும் வாய்ப்பை ஓரியோ வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லோரும் தங்கள் ஹீரோக்களைப் பார்க்க ஆண்டின் முதல் பண்டிகையான பொங்கல் திருநாளை விட வேறு உண்டா என்ன?

click me!