Television
Sep 17, 2018, 11:08 AM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மும்தாஜ் எலிமினேட் ஆகி இருக்கிறார். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக மக்களின் விருப்பப்படி எலிமினேஷன் நடந்திருக்கிறது.
ஏற்கனவே ரித்விகாவை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற மும்தாஜ் மறுத்ததால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர் பிக் பாஸ் ரசிகர்கள். அதனாலேயோ என்னவோ ரித்விகாவிற்கு இந்த வாரம் அதிக அளவிலான வாக்குகள் கிடைத்திருக்கிறது.
இந்த நிகழ்வின் மூலம் பிக் பாஸ் ஓட்டிங் நியாயமாக தான் நடக்கிறது என நிரூபித்து கொள்ள முயன்றிருக்கிறார் பிக் பாஸ்.
ஆனாலும் பிக் பாஸ் சீசன் 2ல் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கிறது எனும் மக்கள் கருத்தில் இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. இதனால் பிக் பாஸ் தற்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார். வழக்கமாக சக போட்டியாளர்கள் தான் யார்? யார்? எல்லாம் எலிமினேஷனுக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.
ஆனால் இந்த முறை பிக் பாஸ் இந்த நாமினேஷனில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இதன்படி இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீதமிருக்கும் 6 போட்டியாளர்களுமே எலிமினேஷனுக்கு பிக் பாஸால் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் நாமினேஷனில் மட்டும் நியாமாக இருந்தால் போதுமா? ஓட்டிங்கிலும் இதே நியாயத்தை கடைபிடிக்க வேண்டுமே!
ஆரம்பத்தில் பல குளறுபடிகளை மேற்கொண்டு ஐஸ்வர்யாவை காப்பாற்ற முயன்ற பிக் பாஸ் இந்த முறையும் அதை செய்தால் பிக் பாஸ் ரசிகர்கள் நிச்சயமாக கடுப்பாகிவிடுவார்கள் என்பது மட்டும் உறுதி. மக்களிடம் ஐஸ்வர்யாவை நாமினேஷனில் நிறுத்துவது போல காட்டிவிட்டு ,இம்முறையும் ஐஸ்வர்யாவிற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன, என பிக் பாஸ் மீண்டும் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை தான். எவ்வளவோ பார்த்துவிட்ட பிக் பாஸ் ரசிகர்கள் இதையும் பார்க்கதானே செய்வார்கள்.