Television
Sep 24, 2018, 12:51 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இது. வரும் ஞாயிறு அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின், பிரம்மாண்ட இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று யாஷிகா மற்றும் பாலாஜி எலிமினேட் ஆனதை தொடர்ந்து , இப்போது ஜனனி, விஜயலஷ்மி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய நான்கு பேரும் தான் இறுதி கட்ட போட்டிக்குள் நுழைந்திருக்கின்றனர். இதனிடையே தற்போது பிக் பாஸ் வீட்டினுள் வைஷ்ணவி மற்றும் ரம்யா ஆகியோர் வந்திருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் கமல் கையில் வைத்திருப்பது போல ஒரு காட்டினை வைத்திருக்கின்றனர். அதை காட்டி இன்று ஒரு எலிமினேஷன் நடக்கவிருக்கிறது என தெரிவித்திருக்கின்றனர். இதனை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர், தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறி இருக்கின்றனர்.
அப்போது பேசிய ரித்விகா நான் இவங்க கூட போட்டி போட்டு இவ்வளவு தூரம் வந்துட்டேன் , இனி நான் வெளியே போனாலும் சந்தோஷமாக தான் இருப்பேன் என கூறி இருக்கிறார். அதே போல ஜனனி மற்றும் விஜி ஆகியோரும் பிக் பாஸ் வீட்டை இட்டு இப்போது வெளியேறுவது தங்களுக்கு வருத்தமாக இருக்காது என்பது போலவே பேசி இருக்கின்றனர்.
ஆனால் ஐஸ்வர்யா என்ன நினைக்கிறார் என்பதை இந்த பிரமோவில் காட்டவில்லை. இதனால் மக்கள் விருப்பப்படி இம்முறை ஐஸ்வர்யா எலிமினேட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே சமயம் இந்த எவிக்ஷன் குறித்த பிரமோ கூட ஒருவகையில் போட்டியாளர்களை ஏமாற்றுவதற்கான நாடகமாகவும் இருக்கலாம்.
ஆனால் சீசன் 1-ல் கூட இதே மாதிரி கடைசி நாளுக்கு முன்னர் ஒரு எலிமினேஷன் நடைபெற்றது அப்போது பிந்து மாதவி வெளியேறி இருந்தார் என்பதனால் ,இன்றைய எலிமினேஷன் நிஜமாகவும் இருக்கலாம். அப்படி ஒரு எலிமினேஷன் நடந்தால் வெளியேறப்போவது யார்? என்பது தான் இப்போது பிக் பாஸ் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.