பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்டுள்ள நடிகை விசித்ரா தனக்கு படப்பிடிப்பு தளத்தில் மாஸ் ஹீரோ ஒருவரால் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ளது கடும் அதிர்ச்சியை சினிமா பிரபலங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகை சரண்யா பேட்டி வைரலாகி வருகிறது.
நடிகை விசித்ரா தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அந்த ஹீரோ தன்னைப் பார்த்த உடனேயே பெயரை கூட கேட்காமல் ‘கம் டு மை ரூம்’ என அறைக்கு அழைத்ததாகவும், அடுத்த நாள் படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைப் பற்றி சொன்னபோது ஸ்டன்ட் மாஸ்டர் தன்னை கன்னத்தில் அறைந்தது பற்றியும் கண்ணீர் மல்க பேசினார். இதனால்தான், தான் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகியதாகவும் அவர் கூறினார்.
அவர் கூறியது பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளானது. விசித்ரா பேசுகையில் தன்னை அறைக்கு அழைத்த நடிகர் பெயரும், கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயரும் ம்யூட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் விசித்ராவை அறைக்கு அழைத்தது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்றும், அவரை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டரின் பெயர் ஏ.விஜய் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
கடந்த 2001-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘பலேவடிவய்யா பாசு’, (Bhalevadivi Basu). இந்தப்படத்தில் நடிக்கும்போது தான் விசித்ராவுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கருத்துகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை காதல் சரண்யா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில், “எங்களை போன்று ஆரம்பத்தில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருக்கும் நடிகைகள் அதிகமாக இந்த கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்.
நானும் கூட அனுபவித்திருக்கிறேன். நானும் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பு வாய்ப்புக்காக காத்திருக்கும் போது பல மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. நாம கீழ் நிலையில் இருக்கும் போது இது பற்றி வெளியே என்ன சொன்னாலும் அது பெரியதாக ஆகாது. பெயர், புகழ், அதிகாரம் என எல்லாம் இருந்தால் தான் நமக்கு நடந்த அநியாயத்தை வெளியே சொல்ல முடியும். அதுபோலத்தான் விசித்ரா 22 வருஷம் கழித்து இது பற்றி பேசி இருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அவர் இப்போ சொன்னது தப்பே கிடையாது. இத்தனை வருடம் கழித்து தனக்கு நடந்த அநியாயத்தை பற்றி அவர் பேசுகிறார். இது பாராட்டக்கூடிய விஷயம் தான். ஒரு சிலர் இதை ஏன் இத்தனை வருஷமா சொல்லல என்று கேட்கிறார்கள். இதெல்லாம் தப்பு, எனக்கும் விசித்ரா சொன்னது போல நடந்து இருக்கு. அந்த நேரத்தில் இதையெல்லாம் தாண்டி தான் நான் வந்திருக்கேன். அப்போ நான் இதை எல்லாம் பேசினால் யாரும் காது கொடுத்து கூட கேட்க ஆள் இல்லை.
நீங்க தானே இந்த துறையை தேர்ந்தெடுத்தீங்க. மீடியானாலே இப்படித்தானே இருக்கும் என்று சிலர் இளக்காரமா பேசி விடுவார்கள். நான் இன்னும் ஒன்று சொல்லிக்க ஆசைப்படுகிறேன். இந்த பிரச்சனை சினிமா துறையில் மட்டுமல்ல பல துறைகளில் இருக்கத்தான் செய்கிறது. நான் சினிமாவில் காதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தேன். அதற்குப் பிறகு பேராண்மை திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த திரைப்படத்தை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது.
அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நான் அவ்வளவு பாதுகாப்பாக ஃபீல் பண்ணுனேன். அந்த மாதிரி எனக்கு நல்ல அனுபவங்கள் கொடுத்த பட குழுவினர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சில மோசமான அனுபவங்களை கொடுத்த நபர்களும் இருக்கிறார்கள் என்றும் நடிகை சரண்யா பேசியுள்ளார்.
ரூ.490 கோடி சொத்து மதிப்பு.. இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்.. யார் தெரியுமா?