மகன் கவுதம சிகாமணிக்காக தனது சொந்த ஊரில் நிற்கும் கூட்டணி கட்சியான விசிக வேட்பாளரை அப்படியே அம்போவென விட்டுவிட்டு, கள்ளக்குறிச்சிக்கு எஸ்கேப் ஆன பொன்முடியால் ரொம்பவே நொந்துப் போயுள்ளாராம் விசிக ரவிக்குமார்.
மகன் கவுதம சிகாமணிக்காக தனது சொந்த ஊரில் நிற்கும் கூட்டணி கட்சியான விசிக வேட்பாளரை அப்படியே அம்போவென விட்டுவிட்டு, கள்ளக்குறிச்சிக்கு எஸ்கேப் ஆன பொன்முடியால் ரொம்பவே நொந்துப் போயுள்ளாராம் விசிக ரவிக்குமார்.
கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பல இடங்களில் திமுக கூட்டணிக்குள் ஒத்துழைப்பு இல்லை என என சர்வேக்கள் ரிசல்ட்டில் தெள்ள தெளிவாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டுக்கு சொல்லனும்னா கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுவதால், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக ரவிக்குமாரை டீலில் விட்டுவிட்டு சென்ற பொன்முடியால் ரவிக்குமார் நொந்துவிட்டாராம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் திமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் விழுப்புரத்துக்குப் பிரசாரம் செய்ய வந்தபோது, அவரைத் தனியாகச் சந்தித்த விசிக ரவிக்குமார், ஸ்டாலினிடம் புலம்பித தள்ளினாராம். அதற்கடுத்து, பொன்முடியை அழைத்த ஸ்டாலின், நீங்க எதிர்பார்த்தமாதிரியே உங்க பையனுக்கு சீட் கொடுத்தாச்சு அவரு ஜெயிச்சிடுவாரு, அதுக்காக நீங்க அங்க போகணும்னு அவசியமே இல்ல, அநீங்க என்ன செய்வீர்களோ? எது செய்வீங்களோ தெரியாது. விழுப்புரத்தில் நாம தான் ஜெயிச்சாகனும் என்று கறாராக சொல்லிட்டாராம் ஸ்டாலின்.
உடனே, கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரத்துக்கு தனது சகாக்கள் படையோடு திரும்பிய பொன்முடி திமுகவினரை முடுக்கி வருகிறார். பொன்முடியின் திடீர் வருகையால் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறாராம் விசிக ரவி.