வசமாக சிக்கும் திருமாவளவன்... விசிக பிரமுகர்களிடம் தெளிய தெளிய வைத்து நடத்தும் விசாரணை!!

By sathish k  |  First Published Apr 4, 2019, 10:47 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காரில் மறைத்து எடுத்து சென்ற 2 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச்சென்றதா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காரில் மறைத்து எடுத்து சென்ற 2 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச்சென்றதா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது. 

பெரம்பலுார் அருகே பேரளி சுங்கச்சாவடி பகுதியில் ஆலத்துார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள். நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு  அரியலுார் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரின் உள்ளே ஒன்றும் இல்லை. காரில் வந்தவர்களுக்கும் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காரை பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு ஓட்டி வந்தனர்.

Tap to resize

Latest Videos

அங்கு டி.ஆர்.ஓ, குன்னம் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் காரில் சோதனை நடந்தது. காரின் கதவுகளுக்கு உள் பகுதியிலும் சீட்களின் அடியிலும் கட்டுக்கட்டாக சுமார் 1 கோடியே 99 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் பணம் வைக்கப்பட்டிருந்தது. காரில் வந்த விசிக பிரமுகர்களான மாநில துணை செயலரான திருச்சி பிரபாகரன், பெரம்பலுார் முன்னாள் மாவட்ட செயலர் தங்கதுரை, சென்னை மாரஸ், திண்டுக்கல் தங்கம் ஆகியோரை போலீசார் பிடித்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

காரில் எடுக்கப்பட்ட   பணம் மற்றும் பிடிபட்ட நான்குபேரையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நால்வரிடமும் தனித்தனியாக துருவித் துருவி சுமார் நான்கு மணி நேரமாக விசாரணை நடக்கிறது. விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும் பணம் பிடிபட்ட இடம் சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட குன்னம் சட்டசபை தொகுதி என்பதனால் திருமாவளவன் தரப்பில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க இந்த பணம் எடுத்து செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் துருவித் துருவி விசாரணை நடக்கிறது.

click me!