அசத்தலாக அதிகாலையிலேயே வாக்கிங்கில் வாக்கு வேட்டையாடும் ஸ்டாலின்... மார்க்கெட், பஸ் ஸ்டேண்ட், பார்க்கில் செம்ம வரவேற்பு

By sathish k  |  First Published Mar 31, 2019, 12:56 PM IST

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் பிஸியான ஷெடியூலிலும், அதிகாலையில் நடைப்பயிற்சியில் இருக்கும் ஸ்டாலின் வாக்கிங் பிரசாரம் செய்யும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  


நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் பிஸியான ஷெடியூலிலும், அதிகாலையில் நடைப்பயிற்சியில் இருக்கும் ஸ்டாலின் வாக்கிங் பிரசாரம் செய்யும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  

Tap to resize

Latest Videos

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் சத்யா, கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் போட்டியிடுகின்றனர்.இவர்களுக்காக, ஸ்டாலின், நேற்று காலை ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, பூ மார்க்கெட்டுகளில் வாக்கு சேகரித்தார். அதே போல காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ள ஸ்டாலின், வெளியூர் சென்றாலும், எவ்வளவு பிஸியான பிரசாரத்திற்கு வேலைக்கு மத்தியிலும், வாக்கிங் செல்ல தவறியது இல்லை. 

தற்போது, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், எந்த ஊரில் தங்கியிருக்கிறாரோ அங்கு, நடைப்பயிற்சி மேற்கொண்டபடி ஓட்டு சேகரித்து வருகிறார். இது வாக்காளர்கள் மத்தியில், செம்ம பாசிட்டிவ் வைரலாக மாறி வருகிறது.

இந்நிலையில், நேற்று ஓசூரில் வேட்பாளர்களுடன் நடந்துச் சென்ற ஸ்டாலின், வழி நெடுகிலும் நின்றிருந்த பொதுமக்களிடம், கைகுலுக்கி கும்பகிட்டும் வாக்கு சேகரித்தார்.  இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும்,  பலர், அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.  

வெய்யிலில் நடக்கும் கூட்டங்களுக்கு மக்கள் அவ்வளவாக சேருவதில்லை, கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு,  துட்டுக்கு வருபவர்களே அதிகம். ஆனால், காலையில் வழக்கமாக மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பஸ் ஸ்டேண்ட், பார்க் போன்ற இடங்களில் வாக்காளர்களை எளிதாக சந்திக்க முடியும் என்பதால், ஸ்டாலின் நடத்தும் காலை நேர வாக்கிங் பிரசாரத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது. இதில், ஸ்டாலினை சந்திக்கவும், அவருடன்,செல்பி எடுக்கவும், பொது மக்கள், பெண்கள், இளைஞர்கள், குட்டிப் பசங்க என ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதிமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் ஆகட்டும் அதிமுக ஆகட்டும் எந்த தலைவர்களும் இப்படி செய்வதில்லை.

click me!