காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே குழந்தைகளுக்கு பேரறிவாளன், பிரபாகரன் என தில்லாக பெயர்சூட்டிய திருமா! நெட்டிசன்ஸ் கலாய்

By sathish k  |  First Published Apr 13, 2019, 9:28 PM IST

காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே பிரசாரத்தின்போது  குழந்தைகளுக்கு பேரறிவாளன், பிரபாகரன் என தில்லாக பெயர்சூட்டிய திருமாவளவனை நெட்டிசன்ஸ் கலாய் கலாய்ன்னு கலாய்த்து வருகின்றனர்.


காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே பிரசாரத்தின்போது  குழந்தைகளுக்கு பேரறிவாளன், பிரபாகரன் என தில்லாக பெயர்சூட்டிய திருமாவளவனை நெட்டிசன்ஸ் கலாய் கலாய்ன்னு கலாய்த்து வருகின்றனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருமாவளவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

சிதம்பரத்தில்  மாடபுரம் பகுதியில் பேசிய திருமாவளவன், “இந்த மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் எனக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென வழக்கம்போல உங்கள் வாசல்தேடி வந்திருக்கிறேன். இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாலும் வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை என இருந்துவிட முடியாது, அப்படியும் இருக்கக்கூடாது. ஜெயித்தே ஆக  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அதற்கு காரணம் திருமாவளவன் எம்.பியாக வேண்டும் என்பதல்ல; ராகுல்  இந்தியாவின் பிரதமராக வேண்டும். அதற்கு திமுக கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். அதற்கு சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் வென்றாக வேண்டும். ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தில் யாரேனும் 100 ரூபாயோ, 200 ரூபாயோ பணம் காசு கொடுத்தால் அதை உங்கள் வீட்டுப் பானையில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

தனக்கு பிறகு இவர்தான் தலைவர் என்று ஜெயலலிதா யாரையும் விரல்காட்டி சொன்னதில்லை. இவர்களெல்லாம் (அதிமுக) ஜெயலலிதாவுக்கு பிடிக்காத தேமுதிக, பாஜக, பாமக போன்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளனர். இதில் எந்த கட்சியையும் ஜெயலலிதா அங்கீகரித்ததில்லை” என்று பேசினார்.

இந்த பிரசாரத்திற்கு மத்தியில்; குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி திருமா கையில் சிலர் குழந்தைகளைக் கொடுத்தனர். அப்போது ஒரு குழந்தைக்கு பேரறிவாளன் எனவும், இன்னொரு குழந்தைக்கு பிரபாகரன் எனவும் பெயர்சூட்டினார் நெகிழவைத்தார் திருமாவளவன். இருப்பது காங்கிரஸ் கூட்டணி ஆனால் பெயர் வைத்திருப்பது பிரபாகரன்,பேரறிவாளன் என பெயர் வைத்ததாக நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.

click me!