தம்பிதுரையை ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பிய மக்கள்... போன வேகத்தில் திரும்பி வந்த சம்பவம்!!

By sathish k  |  First Published Apr 10, 2019, 12:13 PM IST

குடிநீர் கேட்டு பொதுமக்கள் இரவிலும் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை திரும்பி சென்றார்.


குடிநீர் கேட்டு பொதுமக்கள் இரவிலும் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை திரும்பி சென்றார்.

குளத்தூர் அருகே உள்ள  அந்தோணியார் கோவில் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றனர்.  இந்தப் பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் கிடைக்கவில்லை.  பொதுமக்கள் அனைவரும் குடிதண்ணீர் வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது . இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு  குளத்தூர் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். 

Tap to resize

Latest Videos

அப்போது, அப்பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக வேனில் வந்த கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை பார்த்ததும் வேகமாக சத்தம் போட்டனர். வெகுநேரம் ஆகியும் அவர்கள் வழியே விடாததால்  வாக்கு சேகரிக்காமல் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து போகச் செய்தனர்.

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன், வேடசந்தூர் தொகுதியில் லந்தகோட்டை கிராமத்தில், தம்பிதுரையை ஊருக்குள் வரக்கூடாது என்று கூறி, பெண்கள் காலிகுடங்களுடன் வழிமறித்து துரத்தியது குறிப்பிடத்தக்கது.

click me!