ஸ்டாலின் மட்டும் அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக ரெடி... தம்பிதுரை சரவெடி!!

By sathish k  |  First Published Apr 10, 2019, 12:46 PM IST

இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை, ஸ்டாலின் மட்டும் அதை நிரூபிக்கலன்னா கேஸ் போடுவேன் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 


இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை, ஸ்டாலின் மட்டும் அதை நிரூபிக்கலன்னா கேஸ் போடுவேன் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஏழே நாட்கள் உள்ள நிலையில் இரண்டு கட்சியினரும், அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவருக்கொருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதால், பிரசார களம் சூடுபிடித்துள்ளது.  அதேபோல, அந்த தொகுதியில் பல்வேறு இடங்களில் ஊருக்குள் விடாமலும் திருப்பி அனுப்பும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, எல்லா தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கருத்துக்கணிப்புகளை விட மக்கள் கணிப்புகளையே முக்கியமாக பார்க்கிறோம் என்றும் தனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக கூறும் ஸ்டாலின் அதனை நிரூபிக்க தயாரா? என்றும் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் மட்டும் அப்படி  நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலக தயார் என்றும், அப்படி நிரூபிக்கத் தவறினால், ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வேன் என்றும் அவர் கூறினார். 

click me!