அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பா.ம.க வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை கிராமத்திற்குள் வரவிடாமல் தடுத்ததால், அவர் பிரசாரம் செய்யாமல் திரும்பிச் சென்ற சம்பவம் அந்த கூட்டணி கட்சிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுயுள்ளது.
அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் பா.ம.க வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை கிராமத்திற்குள் வரவிடாமல் தடுத்ததால், அவர் பிரசாரம் செய்யாமல் திரும்பிச் சென்ற சம்பவம் அந்த கூட்டணி கட்சிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுயுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ளது, புது கீச்சலம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில், கடந்த சில வருடங்களாக கடுமையான குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. ஏற்கெனவே, இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்னை இருந்துவருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு அரக்கோணம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்று இவர், புது கீச்சலம் பகுதியில், திருத்தணி அ.தி.மு.க எம்.எல்.ஏ நரசிம்மன் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரம் செய்யச் சென்றார். அப்போது, கிராமத்திற்கு வெளியே அப்பகுதி மக்கள் அவர்களைத் தடுத்துநிறுத்தினார்கள். அதிமுக MLA நரசிம்மனை அசிங்க அசிங்கமாக திட்டினார்கள். தண்ணீர் வசதிசெய்து கொடுக்காத நீங்கள், எங்கள் ஊருக்குள் பிரசாரம் பண்ண வரவேக் கூடாது என்றனர். ஊரே சத்தம் போட்டு எதிர்த்ததால், பாமக.வேட்பாளர் பிரசாரம் செய்யாமல் திரும்பிச் சென்றார். மேலும், திருத்தணி உட்பட பல பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்னை இருந்துவருகிறது குரூப்பிடத்தக்கது.
இதேபோல, கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை மீது 2 முறை ஜெயிச்சும், தொகுதிக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்ற கோபம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. கிராமப்புறங்களில் ஊருக்குள் வாக்கு சேகரிக்க விடாமல் திட்டி திருப்பி அனுப்பிய சம்பவம், நாளுக்கு நாள் அரங்கேறும் நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு அதே நிலைமை ஏற்பட்டுள்ளது பாமக மட்டுமல்ல கூட்டணி கட்சிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.