மாமா, மச்சான், மாப்ளே உறவு சொல்லி மக்களோடு மக்களாக மாறி மனம் கவரும் மகேந்திரன்! பொள்ளாச்சி அதகளம்

By sathish kFirst Published Apr 14, 2019, 12:50 PM IST
Highlights

மாப்பிள்ளைக்கு மவுசெல்லாம் கல்யாணத்தன்று மட்டும்தான். சில மணி நேரங்களில் முடிந்துவிடும் அந்த சிலுசிலு சிலிர்ப்பு. ஆனால், தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கோ பிரசார காலம் முழுக்கவே மவுசுதான். 

மாப்பிள்ளைக்கு மவுசெல்லாம் கல்யாணத்தன்று மட்டும்தான். சில மணி நேரங்களில் முடிந்துவிடும் அந்த சிலுசிலு சிலிர்ப்பு. ஆனால், தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கோ பிரசார காலம் முழுக்கவே மவுசுதான். 

தேர்தலின் தன்மையைப் பொறுத்து, ஊரே உலகமே அவர்களை அண்ணாந்து பார்க்கும். இந்த சமயங்களில் அந்த வேட்பாளர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தும் கூடத்தான் அவரது வெற்றி வாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் வரும். 

சில வேட்பாளர்கள் என்னவோ தங்களை தேவதூதர்களாக நினைத்துக் கொள்வார்கள். ’உங்கள் வீட்டுப் பிள்ளை, கூப்பிட குரலுக்கு ஓடி வரும் தங்கம்’ என்றெல்லாம் தாங்கள் புகழப்படுவதையும், பெரும் தலைவர்கள் தங்கள் பெயரை உச்சரித்து வாக்கு கேட்டு மன்றாடுவதையும் கண்டு மமதை கொள்வார்கள் மனதில். 

ஆனால் பொள்ளாச்சியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக களம் காணும் ஆளும் அ.தி.மு.க.வின் வேட்பாளரான மகேந்திரனோ தானொரு சிட்டிங் எம்.பி., வெற்றி வாய்ப்பு மிக அதிகமாயிருக்கும் வேட்பாளர், மிகப்பெரும் கோடீஸ்வரன், தொகுதிக்கு அதிக நிதி வாங்கி தந்த வகையில் வி.ஐ.பி. லிஸ்ட் தொகுதியில் இருப்பவன்! என்று எந்த கெத்தும் இல்லாமல், டவுன் டு எர்த் ஆக மக்களிடம் பழகி வருகிறார். 

பிரசாரத்துக்காக களமாடும் இடங்களில், எதிர்படும் மக்களிடம் ‘ஆத்தா, அய்யா, மாப்ள, மாமா’ என்று பெரியவர்கள் மற்றும் இளம் நபர்களை உறவு சொல்லி அழைப்பதோடு, சிறு குழந்தைகளை ‘கண்ணு, சாமி’ என்று கொங்கு மண்ணுக்கே உரிய  பாசம் கலந்த மரியாதையுடன் அழைத்தே வாக்கு கேட்கிறார். இது மக்களிடம் அவரை ஏதோ தங்கள் குடும்பத்தில் ஒருவர்! என்றே நினைக்க வைத்திருக்கிறது. 

தற்போது களத்தில் நின்று ‘என்னை எம்.பி.யாக்கினால் பொள்ளாச்சிக்கு அதை செய்வேன், இதை செய்வேன்’ என்று வெற்று வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்களை விட, நான் தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து முடித்திருக்கிறேன், பாலங்கள் கட்டிக் கொண்டிருக்கிறேன்,  தரம் வாய்ந்த பள்ளிகளை கொண்டு வந்துவிட்டேன்...என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள நிறைவேற்றியது பற்றி பட்ஜெட்டோடு மகேந்திரன் விளக்குவது மக்கள் மனதில் அவர் மீது பெரும் ஈர்ப்பை உருவாக்கி இருக்கிறது. 

இவ்வளவு பெருமை இருந்தும் கூட, தங்களை ‘ஆத்தா, மாப்ள’ என்று முறை சொல்லி அழைக்கும் மகேந்திரனுக்கே வாக்களிக்க பெருமளவில் முடிவு செய்துவிட்டனர். சத்தமில்லாமல் நடைபெறும் சர்வேக்களின் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன. 

மகேந்திரனின் வெற்றி உறுதி, என்ன வாக்கு வித்தியாசம்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது! என்று குதூகலிக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.

click me!