3வதாக உள்ள தாமரை சின்னத்திற்கு நேராக உள்ள பட்டணை அழுத்தி H.ராஜா வாகிய என்னை ஜெயிக்க வைங்க...

By sathish k  |  First Published Apr 12, 2019, 9:02 PM IST

வர்ற 18-ந் தேதி.. நேரா போங்க, வாக்கு இயந்திரத்தில 3-வதாக தாமரை சின்னம் இருக்கும்.. அதுக்கு நேரா இருக்கிற பட்டனை அழுத்தி.. என்னை வெற்றி பெற செஞ்சிடுங்க என அட்மினை எச்.ராஜா  ட்வீட் போட்டுள்ளார்.
 


வர்ற 18-ந் தேதி.. நேரா போங்க, வாக்கு இயந்திரத்தில 3-வதாக தாமரை சின்னம் இருக்கும்.. அதுக்கு நேரா இருக்கிற பட்டனை அழுத்தி.. என்னை வெற்றி பெற செஞ்சிடுங்க என அட்மினை எச்.ராஜா  ட்வீட் போட்டுள்ளார்.

வருகிற 18-ந் தேதி  தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இதனால் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளனர். இதில் சிவகங்கையில் போட்டியிடும் எச்.ராஜா தனது ட்விட்டரில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்கு இயந்திரத்தின் வரிசையில் 3வதாக உள்ள தாமரை சின்னத்திற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தி அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக பாஜக வேட்பாளர் H.ராஜா வாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் ...

வேண்டும் மோடி! மீண்டும் மோடி!! pic.twitter.com/uAZ6wYGcyf

— Chowkidar H Raja (@HRajaBJP)

Tap to resize

Latest Videos

அந்த டிவீட்டில்; வாக்கு இயந்திரத்தின் வரிசையில் 3வதாக உள்ள தாமரை சின்னத்திற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தி அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக பாஜக வேட்பாளர் H.ராஜா வாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் ... வேண்டும் மோடி! மீண்டும் மோடி!!#HRaja4Sivagangai 

இந்த டிவீட்டில் ஒரு போட்டோவும் போட்டுள்ளார். அதில், வாக்கு இயந்திரத்தில் மற்ற கட்சி பெயர், சின்னங்கள் மறைக்கப்பட, 3-ம் எண்ணில் வேட்பாளர் ராஜா பெயர் மற்றும் அவரது தாமரை சின்னம் பளிச்செனெ தெரிகிறது. அதன் பக்கத்தில் உள்ள பட்டனை ஒரு விரலில் அமுக்கி வாக்களிப்பது போல அந்த படம் இருக்கிறது. ஒருவேளை இந்த டீவீட்டை ஹெச்.ராஜா போட்டாரா  இல்லை தனது அட்மினை வைத்து போட்டுள்ளாரா?  என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என இணையதள வாசிகள் காத்திருக்கின்றனர்.  

click me!