மத்தியசென்னையில் மாஸா ஜெயிக்கப்போறது யாரு? அலசி ஆராய்ந்ததில் அசத்தல் ரிப்போர்ட்

By sathish kFirst Published Apr 1, 2019, 6:29 PM IST
Highlights

மத்திய சென்னையில் திமுகவுக்கு உள்ள செல்வாக்கு கைகொடுக்கிறது. எனினும், தாராளமான செலவினால் அதிமுக. கூட்டணியில் உள்ள பாமக. வேட்பாளரும், அமமுக. அணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. வேட்பாளரும் தயாநிதிக்கு போட்டியாக உள்ளதால் நேரடியாக அதிமுக போட்டியிடாதது, பணபலம், சேகர்பாபு, அன்பழகனின் செல்வாக்கு என அனைத்திலும் தயாநிதி மாறன் தான் லீடிங்!

ஜெயலலிதா கடந்தமுறை தாறுமாறாக தட்டித் தூக்கிய தொகுதிகளில் மிக முக்கியமானது மத்திய சென்னை, தி.மு.க.வின் வெற்றிக்கோட்டையாக அசால்ட்டாக உடைத்தெறிந்து தனது வசப்படுத்தினார் ஜெயலலிதா. ஏற்கனவே, இரண்டுமுறை வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்த திமுகவின் வெயிட்டு கையான தயாநிதி மாறனை தெறிக்கவிட்டார். ஆனாலும் கொஞ்சமும் மனம் தளராத தயாநிதி மாறனுக்கு, மீண்டும் அதே தொகுதியில் சீட் கொடுத்திருக்கிறது திமுக.

இந்த முறை பெருசா எதிரில் மாஸான வேட்பாளர்கள் அவ்வளவாக இல்லை, அதிலும் ஜெயலலிதா போன்ற பெரும் ஜாம்பவான் தலை இல்லாததால் திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும் என சொன்னாலும், அதற்கு முன்னாள் பல சவால்கள் தாயாநிதிமாறனுக்கு இருக்கிறது. ஒருபக்கம் தினகரனின் வேட்பாளர் தெஹலான் பார்கவி, தயாநிதி மாறன் மற்றும் தினகரனின் வேட்பாளர் லெவலுக்கு செலவு செய்ய முடியாது என பாமகவில் யாரும் முன்வராததால், அதிமுக வேட்பாளர்கள் அளவுக்கு எந்நாளும் செலவு பண்ணமுடியும் என தில்லாக சீட் வாங்கிக்கொண்டு பிரச்சாரத்தில் இறங்கினார் இளம் தொழிலதிபர் சாம் பால். 1 லட்சத்திற்கும்மேலான முஸ்லிம் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் தெஹலான் பார்கவியை களமிறக்கியிருக்கிறது அமமுக.

"போட்டிப் போட்டுக்கொண்டு வெயிட்டு காட்டும் சேகர் பாபு, ஜெ.அன்பழகன்"

எழும்பூர், துறைமுகம், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளை தி.மு.க. மாவட்டச் செயலாளர் சேகர்பாபு கவனித்துக்கொள்கிறார். இந்த மூன்று தொகுதிகளிலும் வார்டு வாரியாக லிஸ்டை கையில் வைத்துக்கொண்டு டீம் டீமாக வோட்டு வேட்டையில் இறங்கியிருக்கிறார். திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளை மா.செ.வான ஜெ.அன்பழகன் தன பங்கிற்கு அதிகமாக ஊட்டு வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

கடந்த தேர்தலில் ஜெ. அன்பழகனைத் தவிர அண்ணாநகர் கோகுலஇந்திரா, ஆயிரம்விளக்கு வளர்மதி, துறைமுகம் பழ.கருப்பையா திரும்பும் திசையெல்லாம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கட்டுப்பாட்டில் இருந்தததால் எவ்வளவு காசு கொட்டியும் ஜெயலலிதாவின் மாசுக்குக்கு முன்பு தவிடு பொடியானது.

இந்தமுறை அப்படியல்ல. அண்ணாநகர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, எழும்பூர், துறைமுகம், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் ஆகிய மத்தியசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலுமே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் அதையும் மீறி ஜெ.அன்பழகன் மற்றும் சேகர்பாபு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் செம்ம கூலாக இருக்கிறாராம் தயாநிதிமாறன்.

அதிமுக கூட்டணியில் பிஜேபி,பாமக,தேமுதிக ஆதரவுபெற்ற கட்சிகள்தான். அதனால், முஸ்லிம் சமுதாய ஓட்டுகளை பிஜேபிக்கு எதிரான திமுக கூட்டணிக்குத்தான் போடவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உட்பட முஸ்லிம் அமைப்புகள் ஜமாத்தில் பேசிவருகிறார்கள். அதேபோல மார்வாடிகளின் ஓட்டுகளும் மத்திய சென்னை வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வாக்குகள். அனால் மார்வாடிகளோ மோடிக்கு தான் ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் மார்வாடிகள் மத்தியில் தனிப்பட்ட மவுசு சிருப்பதால் தயாநிதிமாறன் ஓட்டுகளை தனக்கு சாதகமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

தயாநிதிக்கு தனிப்பட்ட முறையில் ப்ளஸ், மைனஸ் இரண்டும் கலந்திருந்தாலும் மத்திய சென்னையில் திமுகவுக்கு உள்ள செல்வாக்கு கைகொடுக்கிறது. எனினும், தாராளமான செலவினால் அதிமுக. கூட்டணியில் உள்ள பாமக. வேட்பாளரும், அமமுக. அணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. வேட்பாளரும் தயாநிதிக்கு போட்டியாக உள்ளதால் நேரடியாக அதிமுக போட்டியிடாதது, பணபலம், சேகர்பாபு, அன்பழகனின் செல்வாக்கு என அனைத்திலும் தயாநிதி மாறன் தான் லீடிங்!

click me!