ஒரே நாளில் மூன்று தொகுதியில் பிரசாரம்... தெறிக்கவிட வரும் கேப்டனை காண தலைநகரில் குவியும் தொண்டர்கள்!!

By sathish kFirst Published Apr 15, 2019, 12:11 PM IST
Highlights

நாளை பிரச்சாரம் முடியும் நிலையில் இன்று விஜயகாந்த்தின் பிரச்சாரம் சென்னையில் நடைபெறுவதை ஒட்டி அவரைப் பார்ப்பதற்காகவும், அவரது பெட்சைட் கேட்கவும் தமிழகம் முழுவதும் இருந்தும், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து அதிகமாகவும் தேமுதிகவினர் சென்னையில் குவிந்துள்ளனர்.
 

நான் நன்றாக இருக்கிறேன். அமெரிக்கா சென்றுவந்த பிறகு எனது உடல்நிலையும் நல்லா இருக்கு. நான் கூடிய சீக்கிரம்  பிரசாரத்தில் கலந்துகொள்வேன். என்ன பேசுவேன் என்பதை அங்கு வந்து கேட்கச் சொல்லுங்கள். மருத்துவரின் அறிவுரையின்படி தொடா்ந்து பிரசாரங்களில் பங்கேற்பேன் என்றும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும். திமுக கூட்டணி தோற்கும். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என்று தான் அா்த்தம். அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையேயான போட்டி என்பது, தா்மத்திற்கும், அதா்மத்திற்கும் இடையே நடைபெறும் போட்டி. இதில் தா்மம்தான் வெற்றி பெறும். மோடி நல்லவா், அவா் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைமை வெளியிட்ட வீடியோவில் விஜயகாந்த் இப்படி பேசியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த் இன்று மாலை சென்னையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக சொல்லப்பட்டது.

அந்த அறிக்கையை தொடர்ந்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய இருப்பதை முன்னிட்டு நேற்று இரவு ஒரு வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறார் அதில், எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். நமது சின்னம் முரசு. நாம் நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கூட்டணிக் கட்சிகளின் அவரவர் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நாளை பிரச்சாரம் முடியும் நிலையில் இன்று விஜயகாந்த்தின் பிரச்சாரம் சென்னையில் நடைபெறுவதை ஒட்டி அவரைப் பார்ப்பதற்காகவும், அவரது பெட்சைட் கேட்கவும் தமிழகம் முழுவதும் இருந்தும், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து அதிகமாகவும் தேமுதிகவினர் சென்னையில் குவிந்துள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்படத் திட்டமிட்டுள்ள விஜயகாந்த், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் தொடங்கி ஆர்.கே.நகரில் நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள் தேமுதிகவினர்.

விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்டு பேசுவதும், நிறைய காட்சிகள் எடுத்து கட் செய்து எடிட் செய்யப்பட்டுள்ளதும் இந்த வீடியோவில் தெரிகிறது.
அதேநேரம், ‘ரொம்ப நேரம் அவரால பேச முடியாது. அப்படிப் பேசினாலும் வெளியில், இன்ஃபெக்‌ஷன் பிரச்னைகளும் இருக்கும். எனவே ஜாக்கிரதையா பாத்துக்கங்க என்று டாக்டர்களும் சொல்லியுள்ளனர்.

click me!