20 ருபீஸ் டோக்கன் கொடுத்து உலகிலேயே புது பார்முலாவை உருவாக்கிய தினகரன் கட்சியினர் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு புது டெக்னிக்கை ஃபாலோ பண்ண உள்ளது தேர்தல் ஆணையத்தையே அதிரவைத்துள்ளது.
20 ருபீஸ் டோக்கன் கொடுத்து உலகிலேயே புது பார்முலாவை உருவாக்கிய தினகரன் கட்சியினர் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு புது டெக்னிக்கை ஃபாலோ பண்ண உள்ளது தேர்தல் ஆணையத்தையே அதிரவைத்துள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகருக்கு நடந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் தருவதாக கூறி, 20 ருபீஸ், டோக்கன் வழங்கிய தினகரன் தரப்பினர், இந்த தேர்தலில், வாக்காளர்களை கவர, குறைந்த மதிப்புள்ள, ‘ கிப்ட் வவுச்சர்’ எனும் பரிசு கூப்பன்களை வழங்கி வருவதாக தெரிகிறது.
இது குறித்து, அதிமுகவினர் கூறியதாவது; அமமுக என்ற கட்சியை நடத்தி வரும் தினகரன், லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவரின் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகளாக, பரிசு பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தலைநகரின் முக்கிய தொகுதியான ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக, “குக்கர்” சின்னத்தில், தினகரன் போட்டியிட்டபோது, அவரின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு, ஓட்டுக்கு பணம் தருவதாக, 20 ருபீஸ் டோக்கன் வழங்கினர்.
இதனால், தினகரன், ஆர்.கே.நகருக்கு செல்லும்போது, பலரும், 20 ரூபாய் நோட்டை காட்டி, போராட்டங்களில் ஈடுபட்டனர். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களுக்கு, தினகரன், தேர்தல் செலவுக்கு பணம் வழங்காததால், அவர்கள், அதிருப்தியில் உள்ளனர்.இதனால், அவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபடவில்லை. பிரசாரத்திற்கு, தினகரன் வரும்போது மட்டும், கூட்டத்தை சேர்க்கின்றனர். ஜவுளி, பல்பொருள் அங்காடி, நகை கடை போன்றவற்றில், 250 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.
இவற்றை வாங்குவோர், கல்யாணத்துக்கு கிப்ட், கல்யாண நாளுக்கு கிப்ட், பர்த்டே கிப்ட் வாங்க கிப்ட் வவுச்சர் உறவினர்களிடம் தருகின்றனர். அவர்கள், அந்த கடைகளில் அந்த மதிப்பிற்கு இணையான பரிசு பொருட்களை வாங்குகின்றனர்.
இந்நிலையில், தினகரன் ஆதரவாளர்கள், தேர்தலில், பரிசு பெட்டி சின்னத்தில் ஓட்டளித்தால், தேர்தலுக்கு பின், பெரிய தொகையை தருவதாக கூறி, வாக்காளர்களிடம், காலி பரிசு பெட்டிக்குள் கிப்ட் வவுச்சர்களை வழங்கி வருகின்றனர். தினகரன் கட்சியில் இந்த புது டெக்னீக்கால் தேர்தல் ஆணையம் கடைகளில் தரப்படும் கிப்ட் வவுச்சர்களின் விற்பனையையும், கண்காணிக்க வேண்டும் அவர்கள் கூறினர்.