கிரிமினல் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது லிஸ்ட்... மொத்தம் 101 பேரா?

By sathish k  |  First Published Apr 16, 2019, 10:58 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களத்தில் உள்ள நாடாளுமன்ற மற்றும் இடைத் தேர்தல் வேட்பாளர்களில், கிரிமினல் வழக்குகள் அதிகம் உள்ளவர்கள் வரிசையில் திமுகவில் 11 பேரும் , இரண்டாம் இடத்தில சீமான் காட்சியிலும், கமல் கட்சி மூன்றம் இடம் பிடித்துள்ளது. 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களத்தில் உள்ள நாடாளுமன்ற மற்றும் இடைத் தேர்தல் வேட்பாளர்களில், கிரிமினல் வழக்குகள் அதிகம் உள்ளவர்கள் வரிசையில் திமுகவில் 11 பேரும் , இரண்டாம் இடத்தில சீமான் காட்சியிலும், கமல் கட்சி மூன்றம் இடம் பிடித்துள்ளது. 

துாத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகளில், தலா, ஏழு வேட்பாளர்கள், கிரிமினல் பின்னணியுடன் உள்ளனர்.  40 லோக்சபா தொகுதிகளுக்கும், நாளை மறுநாள், ஓட்டுப்பதிவு நடக்கிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில், 819 மனுக்களை ஆய்வு செய்து, குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு சார்ந்த முடிவுகளை, ATR என்ற, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான குழு வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதன்படி, தமிழகத்தில், 101 வேட்பாளர்கள் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில், 67 பேர் மீது அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிகபட்சமாக திமுக வேட்பாளர்களில் 11 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில், 7 பேர் மீது, அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக, நாம் தமிழர் கட்சியில் 8 பேர்; மக்கள் நீதி மையத்தில் 5 பேர், அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளில், தலா, மூன்று பேர், விசிகவில் ஒரு வேட்பாளர் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன. யார் யார்? திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், துாத்துக்குடி - கனிமொழி, நீலகிரி - ஆ. ராஜா, கள்ளக்குறிச்சி - கவுதம சிகாமணி, மத்திய சென்னை - தயாநிதிமாறன், தென்காசி - தனுஷ் எம்.குமார், சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன், நெல்லை - ஞானதிரவியம், பெரம்பலுார் - பாரிவேந்தர், தருமபுரி - எஸ்.செந்தில்குமார், வேலுார் - டி.எம்.கதிர் ஆனந்த் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதேபோல, அதிமுக, சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில், கரூர் - தம்பிதுரை, திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க.,வில், தருமபுரி - அன்புமணி, அரக்கோணம் - ஏ.கே.மூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளர்களில், சிவகங்கை - கார்த்தி சிதம்பரம், தேனி - இளங்கோவன் உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

18 தொகுதிகளில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளில், 18ல், கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 
இதில், அதிகபட்சமாக, துாத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகளில், தலா 7 வேட்பாளர்கள், கிரிமினல் வழக்குகளுடன் களத்தில் உள்ளனர். மதுரையில், 6 பேர். தருமபுரியில், 5 பேர் மீதும், தேனி, விருதுநகர், விழுப்புரம், தென்காசி, சிவகங்கை, மத்திய சென்னை, சேலம் தொகுதிகளில், தலா 4 வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.

நீலகிரி, கரூர், ஸ்ரீபெரும்புதுார், கன்னியாகுமரி, தென் சென்னை, சிதம்பரம், புதுச்சேரி தொகுதிகளில், தலா 3 வேட்பாளர்கள், கிரிமினல் வழக்கு பின்னணியுடன் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

click me!