Latest Videos

அவங்க அப்பா ஸ்டாலினை அழைத்து வந்தாலும் சரி, விவாதத்துக்கு நான் ரெடி... உதயநிதிக்கு அன்புமணி அழைப்பு!!

By sathish kFirst Published Apr 9, 2019, 6:21 PM IST
Highlights

அவரது தந்தை ஸ்டாலினை துணைக்கு அழைத்து வந்தாலும், விவாதத்துக்கு நான் தயாராக உள்ளேன் என  உதயநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் அன்புமணி.

அவரது தந்தை ஸ்டாலினை துணைக்கு அழைத்து வந்தாலும், விவாதத்துக்கு நான் தயாராக உள்ளேன் என  உதயநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் அன்புமணி.

தேர்தலுக்கு இன்னும் எட்டே நாட்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் அனல் பறக்கிறது. அதேபோல ஒருவரை ஒருவர் கண்டம் பண்ணுவதிலும் குறை வைக்கவில்லை, அதிலும் அன்புமணியை திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டு வருகிறார். 'மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ் மணி' என்று மேடைக்கு மேடை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி; லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், 70 மாவட்ட செயலர்களை அழைத்து பேசினார். இதில், 60 பேர், திருமாவளவனின், விசிக கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என சொன்னார்கள் ஆனாலும், ஸ்டாலின், விசிகவுடன் கூட்டணி அமைத்தார். 

ஆனால், தலித் அல்லாதோர் பகுதிகளில் பிரசாரத்துக்கு செல்லும் போது, பிரசார வாகனத்தில், விசிக கொடியையும், சுவர் விளம்பரத்தில், திருமாவளவனின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்பதையும், பயன்படுத்த வேண்டாம் என திமுக வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ் பண்ணி இருக்கிறார்.

தலித் மக்கள் வாழும் பகுதிகளில் மட்டும், திருமாவளவனின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என பிரசாரம் செய்யவும், சுவர் விளம்பரம் எழுதவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  திருமாவளவனை அவர் போட்டியிடும் தொகுதி மற்றும் விழுப்புரத்தில் மட்டும் பிரசாரத்தில் ஈடுபட, திமுக அறிவுறுத்தியுள்ளது. 

விசிக என்றால் அடாவடி, அராஜகம், கட்ட பஞ்சாயத்து போன்றவற்றால், திமுகவுக்கு ஓட்டு பாதிக்கப்படும் என்பதே இதற்கு காரணம். திமுக 4 சின்ன பசங்களை நம்பி கட்சி நடத்துகிறது. அவர்கள் அரசியல் வணிகர்களாக மாறி, பணக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கி உள்ளனர். திமுகவில் ஏராளமான நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளனர். தன் மகன் உதயநிதியை திமுகவின் அடுத்த தலைவராக முன்னிறுத்த ஸ்டாலின் அவர்களை புறக்கணித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், ஆமாம் அந்த நடிகர் உதயநிதிக்கு, அரசியல் பற்றி என்ன தெரியும்? அவருக்கு தெரிந்தது எல்லாம் சினிமா தான்! என்னிடம் விவாதிக்க தயார் எனக் கூறும் உதயநிதி, அதற்கு தயாராக அண்ணா அறிவாலயத்தில் மேடை அமைத்தாலும், அவரது தந்தை ஸ்டாலினை துணைக்கு அழைத்து வந்தாலும், விவாதத்துக்கு நான் தயாராக உள்ளேன் என இவ்வாறு அவர் கூறினார்.

click me!