ராமதாசின் சொல்லுக்கும், செயலுக்கும் நான் எப்போதுமே கட்டுப்படுகிறேன். அவர், உட்கார் என்றால் உட்காருவேன்; எழுந்து நில் என்றால், எழுந்து நிற்பேன், கிணற்றில் குதி என்றால் குதிப்பேன் என ராமதாஸ் மீது தான் வைத்திருக்கும் மரியாதையை பேட்டியில் கூறியுள்ளார்.
ராமதாசின் சொல்லுக்கும், செயலுக்கும் நான் எப்போதுமே கட்டுப்படுகிறேன். அவர், உட்கார் என்றால் உட்காருவேன்; எழுந்து நில் என்றால், எழுந்து நிற்பேன், கிணற்றில் குதி என்றால் குதிப்பேன் என ராமதாஸ் மீது தான் வைத்திருக்கும் மரியாதையை பேட்டியில் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் ஏ.கே.மூர்த்தி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னணி நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
அதில், நீங்கள் ஏற்கனவே போட்டியில்லை ஸ்ரீபெரும்புதுாரில் போட்டியிடாமல், அரக்கோணத்திற்கு ஓட்டம் பிடித்தது ஏன்? என்றாகி கேள்விக்கு பதிலளித்த அவர், இங்கிருந்து அங்கு ஓடு; அங்கிருந்து இங்கே ஓடு என்று, ராமதாஸ் பிறப்பிக்கும் உத்தரவை, வேதவாக்காக கருதி, அவருக்கு கட்டுப்படுவதால் தான், அரக்கோணத்தில் போட்டியிடுகிறேன் என்றார்.
அடுத்ததாக, நாடாளுமன்றத் தேர்தல், எப்போது வந்தாலும், உங்களுக்கு,சீட் வழங்கப்படுவதன் சூட்சுமம் என்ன? எனக் கேட்டதற்கு பதிலளித்த அவர், டாக்டர்.அய்யா ராமதாசின் சொல்லுக்கும், செயலுக்கும் நான் எப்போதுமே கட்டுப்படுகிறேன். அவர், உட்கார் என்றால் உட்காருவேன்; எழுந்து நில் என்றால், எழுந்து நிற்பேன், கிணற்றில் குதி என்றால் குதிப்பேன்.
என்னை 2 முறை, சட்டசபை தேர்தல், 5 முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ராமதாஸ் உத்தரவிட்டார். அய்யா ராமதாஸ், எந்த நேரத்தில்,எத்தனை பணிகளை தந்தாலும், செய்து முடிப்பேன். உண்மையான தொண்டனாக இருக்கிறேன். இது தான், சீட் கிடைக்க காரணமே தவிர, வேறு எந்த சூட்சுமமும் இல்லை எனக் கூறியுள்ளார்.