க்ளைமேக்சில் ஆயுதத்தை கையிலெடுத்த ஏசி சண்முகம்... பணத்தை பறிகொடுத்த கதிர் ஆனந்த் கதி?

By sathish k  |  First Published Apr 14, 2019, 9:28 PM IST

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடைசிகட்ட ஆயுதத்தை எடுத்துள்ளார்.  பலகோடி ரூபாய் பணத்தை பறிகொடுத்த கதிர் ஆனந்த் க்ளைமேக்சில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.


வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடைசிகட்ட ஆயுதத்தை எடுத்துள்ளார்.  பலகோடி ரூபாய் பணத்தை பறிகொடுத்த கதிர் ஆனந்த் க்ளைமேக்சில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் நிற்கிறார்.  இவரை எதிர்த்து அதிமுகவின் இரட்டை இலை  சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். சொந்த கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் தேர்தல் செலவுக்காக வாரி தந்தார் கதிர் ஆனந்த்.  

Tap to resize

Latest Videos

அதுமட்டுமல்ல அதிக வாக்குகள் வாங்கி தரும் தொகுதி நிர்வாகிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை என ஏசி சண்முகம் அறிவிக்க, 50 லட்சம் பரிசு என போட்டிக்கு துரைமுருக்கணும் சொல்ல கதிர்ஆனந்த் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு செய்து 10 லட்சம் பறிமுதல் செய்தது. ஆதரவாளர் வீட்டில் 11 கோடி ரூபாய் பணத்தினை பிடித்தது. 

இந்நிலையில் ஏப்ரல் 13ந்தேதி இரவு வாணியம்பாடி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டு ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என பண விநியோகம் செய்துள்ளனர். கடந்த தேர்தலில் மானாவாரியா பலகோடிகளை செலவு செய்துவைத்த வேலைகள், ரஜினி மக்கள் மன்றத்தின் வாக்கு வங்கி என ஏசி சண்முகன் ஜெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

ஒருபக்கம் பணப் பட்டுவாடா நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், ரெய்டுல் பலகோடியை பறிகொடுத்த துரைமுருகன் மகன், கதிர்ஆனந்துக்காக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளார் ஸ்டாலின்.  கதிர்ஆனந்த்க்காக இன்று காலை ஆம்பூர் நகரத்தில் நடந்தபடி பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது ஆம்பூர் காய்கனி மார்க்கெட்க்கு வந்திருந்த பெண்களிடமும் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.

click me!