திருத்தணியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கதற கதற கற்பழிப்பு; தண்ணீர் கேட்பது போல் நடித்து அத்துமீறல்

By Velmurugan s  |  First Published Feb 1, 2024, 11:23 AM IST

திருத்தணி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணை கற்பழிப்பு செய்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு வட்டம், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வசித்து வருபவர் சாம்பு. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் நடைபெற்று இவரது மனைவி லோகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் லோகேஸ்வரிடம் அதிகம் தாகமாக இருக்கிறது தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தண்ணீர் எடுப்பதற்காக லோகேஸ்வரி உள்ளே சென்றுள்ளார். அப்போது திடீரென அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த அந்த வாலிபர் கதவை பூட்டிக் கொண்டு அப்பெண்ணை கற்பழித்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.

Tap to resize

Latest Videos

undefined

அண்ணாமலைக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடி கம்பம் சரிந்து விபத்து; வேடிக்கை பார்த்த நபர் படுகாயம்

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட லோகேஸ்வரி திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் மலர் துரித விசாரணை மேற்கொண்டு பெண்ணை கற்பழிப்பு செய்த ஆர்.கே.பேட்டை அருகிலுள்ள சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சார்ந்த பாபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

திருத்தணியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!