40 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்த நபர், அதையே கூறி மிரட்டி பல முறை அவரை பலாத்காரம் செய்தது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அசோகா கார்டன் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்டி, அவற்றை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டினார் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் சமீபத்தில் பெண்ணின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது கணவருக்கு அனுப்பியதை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அம்பலமாகியுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை அசோகா கார்டன் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காதலியைக் கொன்று உடலை 2 வாரமாக வீட்டு தொட்டியில் அடைத்து வைத்த இளைஞர்! வசமாக சிக்க வைத்த செல்போன்!
பாதிக்கப்பட்ட பெண் ஒரு துணிக்கடி நடத்தி வந்ததாக போலீசார் சொல்கின்றனர். அவரது கடைக்கு அசோகா கார்டனில் வசிக்கும் விஜய் பால் அடிக்கடி வந்து சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அவரிடம் அசோகா கார்டனில் ஒரு நிலத்தை வாங்க விரும்புவதாகக் கூறியுள்ளார். ஜனவரி 2022 இல், விஜய் அந்தப் பெண்ணை அசோகா கார்டமனில் உள்ள ஒரு நிலத்தைக் காட்டுவதாகக் கூறி, ஏமாற்றி, தன் வாடிகை வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த விஜய் அதனை வீடியோ பதிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால், பெண்ணின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்புவதாகவும் மிரட்டியுள்ளார். பின்னர் இதையே கூறி பிளாக்மெயில் செய்து பலமுறை அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கூகுள் டிரைவ் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிறதா? ஈசியாக ஸ்பேஸ் உருவாக்கும் வழிகள் இதோ!
சமீபத்தில், விஜய் பெண்ணின் கணவருக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியபோது விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, குடும்பத்தினர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
(பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையைப் பாதுகாக்க அரவது அடையாளத்தை வெளியிடப்படக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, பாதிக்கப்பட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.)
விமானம் தாங்கி கப்பல்களுடன் இந்திய விமானப்படை மெகா போர் பயிற்சி! சீனாவுக்கு எச்சரிக்கை!