
உடுமலையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பத்ரகாளியம்மன் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் ஒரே மகள் ஹர்த்திகாராஜ் (17), அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இதையும் படிங்க;- பால்வாடி படிக்கும்போது கொடுத்தே பூந்தி.. 8வது படிக்கும் போதே எடுக்க வச்சே வாந்தி.. கானா பாடகரை தேடுது போலீஸ்.
படுகொலை
கடந்த 28-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பி தனியாக இருந்துள்ளார். மாணவியின் தாயார் பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் சமையலறையில் அவரது மகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் அலறி துடித்துள்ளார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். தடயவியல் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆய்வு நடைபெற்றது. கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடித்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- நாக்கு கூசும் அளவிற்கு ஆபாசம்.. கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..வசமாக சிக்கிய பேராசிரியர்