ரூ.60 லட்சம் பேரம் படியாததால் செக்ஸ் புகார்! SNS கல்லூரி ஓனர் போலீசிடம் கதறல்!

By vinoth kumar  |  First Published Sep 21, 2018, 9:24 AM IST

ரூ.60 லட்சம் கேட்டு தன்னை மிரட்டியதாகவும் ஆனால் தான் பணம் கொடுக்கவில்லை என்பதால் செக்ஸ் வீடியோவை வெளியிட்டுவிட்டார்கள் என்று எஸ்.என்.எஸ் கல்லூரி ஓனர் சுப்ரமணியம் போலீசாரிடம் கதறியுள்ளார்.


ரூ.60 லட்சம் கேட்டு தன்னை மிரட்டியதாகவும் ஆனால் தான் பணம் கொடுக்கவில்லை என்பதால் செக்ஸ் வீடியோவை வெளியிட்டுவிட்டார்கள் என்று எஸ்.என்.எஸ் கல்லூரி ஓனர் சுப்ரமணியம் போலீசாரிடம் கதறியுள்ளார். கோவை சரவணம் பட்டி பகுதியில் உள்ளது எஸ்.என்.எஸ் கல்வி குழுமம். பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் சுப்ரமணியம் கோவை சுற்றுவட்டாரங்களில் வெகு பிரபலம். இந்த நிலையில் தான் கல்லூரி அலுவலகத்தில் பெண் ஒருவரிடம் அவர் அத்துமீறும் இரண்டு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அலுவலகத்திற்குள் இருக்கும் பெண் ஒருவரை சுப்ரமணியம் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகள் உள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்கள் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சிகளிலும் ஓயாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் இளம் கோவை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரமணியத்தின் கல்லூரியில் வேலை பார்த்ததாகவும், குடும்ப சூழல் காரணமாக அவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்துக் கொண்டதாகவும், ஆனால் சமீப காலங்களில் அவர் அதிகம் துன்புறுத்தியதால் அவரது அத்துமீறலை வீடியோவாக பதிவு செய்ததாகவும், இதனை தெரிந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

ஆனால் அந்த இளம் பெண் கொடுத்த வீடியோவில் சுப்ரமணியம் அத்துமீறும் போது சிரிப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால் சுப்ரமணியம் மீது போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் போது சுப்ரமணியம் கண்ணீர் விட்டு கதறியதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. 

அந்த பெண்ணின் ஒப்புதல் உடன் தான் அத்துமீறியதாகவும், தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்று வீடியோ எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே இந்த வீடியோ இருப்பதாக ஒரு இளைஞர் தன்னை தொடர்பு கொண்டு ரூ.60 லட்சம் கேட்டதாக திடுக்கிடும் தகவலை சுப்ரமணியம் கூறியுள்ளார். ஆனால், வீடியோவில் எனது முகம் தெளிவாக தெரியவில்லை என்பதால் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக சுப்ரமணியும் போலீசாரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. 

இதனால் தான் அந்த இளைஞர் தனக்கு உள்ள பத்திரிகையாளர்கள் தொடர்பு மூலம் இந்த வீடியோவின் டீசரை கடந்த வாரமே யூட்யூபில் வெளியிட்டதாக சுப்ரமணி ஆதாரத்தையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதனால் குழப்பம் அடைந்த போலீசார், புகார் கொடுத்த பெண்ணை தனது பெற்றோருடன் காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரிடம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகே இந்த விவகாரத்தில் முழு உண்மை தெரியவரும்.

click me!