மதுரை மாநகர் கோ .புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு விஜயலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது பெண் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்திய காவலர் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் கோ .புதூர் டி.ஆர்.ஒ. காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு விஜயலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது பெண் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே விபச்சார வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப வறுமையில் உள்ள ஏழை பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து அங்கு வாடகை வீட்டை பிடித்து விபச்சாரத்தை ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.
undefined
மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்(49) மற்றும் செல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காசி(42) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் சுமதி மற்றும் காவலர் தேவேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து விபச்சார நடத்தி வந்ததும் அதற்கு புரோக்கராக ஆட்டோ ஓட்டுனர் காசி செயல்பட்டதும் தெரிய வந்தது. மேலும் நேற்று மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் சுமதியின் மகள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்டவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் காவலர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.