கடன் தொல்லையால் மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்! கெஞ்சியும் கேட்டு கதறிய மகள்!!

By SG Balan  |  First Published Aug 9, 2024, 12:01 AM IST

பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய தாயின் பேச்சைக் கேட்டு வேதனை அடைந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தாரல். போலீசார் சிறுமியின் தாய் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.


சென்னையில் கணவரைப் பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் கடன் தொல்லையைத் தீர்ப்பதற்காக பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை தெரியவந்துள்ளது.

கணவரின் மரணத்துக்குப் பின் குடும்பத்திற்கு சரியான வருமானம் இல்லாமல் வறுமையின் இருந்துள்ளனர். இதனால், மகளின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு அவசரமாகப் பணம் தேவைப்பட்டபோது, முத்துலட்சுமி ரூ.40,000 கடன் வாங்கி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த முத்துலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இவரிடம் வாங்கிய பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாத சூழலில், பணத்துக்குப் பதிலாக தன் மகளை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து பாலியல் தொழிலில் தள்ளிவிட்டார்.

அம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுக்கும் மியா கலிஃபா! பேனரில் சம்பவம் செய்த காஞ்சிபுரம் ரசிகர்கள்!

முத்துலட்சுமி 14 வயது சிறுமியை 2021ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார். இதனால் அந்தச் சிறுமியில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இருக்க முடியாமல் வீட்டிற்குத் தப்பித்துச் சென்றுவிட்டார். கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத தாய் மீண்டும் அந்தச் சிறுமியை முத்துலட்சுமியிடம் கொண்டுபோய் விட்டுவிட்டார்.

மீண்டும் முத்துலட்சுமியிடம் இருந்து தப்பித்துச் சென்ற சிறுமி, தனக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரின் துணையுடன் மணலி பகுதியில் 8 மாதமாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் சிறுமியின் தாய் அவரைத் தொடர்புகொண்டு மீண்டும் முத்துலட்சுமியிடம் செல்ல கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

தாயின் பேச்சைக் கேட்டு மன வேதனை அடைந்த சிறுமி காவல் நிலையத்தில் சென்று முறையிட்டுள்ளார். காவல்துறையினர் சிறுமியின் தாய், புரோக்கர் முத்துலட்சுமி (36), அவரது கணவர் நிஷாந்த்(37), மகேஸ்வரன் (24), கிஷோர் (22), அஜித் குமார்(20) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ரூ.2 கோடி BMW கார், கோல்டு வாட்ச்... அப்பாவுக்கு வெயிட்டான பரிசு கொடுத்து அசத்திய தங்க மகன்!

click me!