கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, லாட்ஜில் சோதனை செய்த போது இரு அறைகளில் இருந்த வாலிபர்கள் 2 பேர் அரை நிர்வாண நிலையில் தப்பித்து ஓடினர்.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் அரை நிர்வாணத்துடன் 2 இளைஞர்கள் தப்பியோடிய நிலையில் 3 பெண்கள் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் தற்போது வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்றும் மூன்றாவது நாளாக கடற்கரையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, லாட்ஜில் சோதனை செய்த போது இரு அறைகளில் இருந்த வாலிபர்கள் 2 பேர் அரை நிர்வாண நிலையில் தப்பித்து ஓடினர். மற்றொரு அறையில் இருந்தவரும் தப்பி ஓட முயன்ற போது அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மேலும் அந்த அந்த அறையில் இளம்பெண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது லாட்ஜில் விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாட்ஜில் இருந்த 3 இளம்பெண்களையும் மீட்டனர். பிடிப்பட்டவரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 3 பெண்களில் 2 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
புரோக்கர் மூலம் இவர்கள் கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த வாரம்ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடந்தது தொடர்பாக 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டு லாட்ஜ் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.