விருந்துக்கு வந்த ஐஐடி மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த குற்றச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது
.
விருந்துக்கு வந்த ஐஐடி மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த குற்றச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இது போன்ற குற்றங்களை தடுக்க அரசும் காவல் துறையும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட வாய்ப்பு கிடைக்கும் போது தங்களது கொடூரமூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படியான ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பயிற்சிக்கு வந்த ஐஐடி மாணவிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் தான் அது.
இதையும் படியுங்க: அக்னி பத் திட்டத்தில் விமானப் படையில் சேர 7.50 லட்சம் விண்ணப்பங்கள்..! இளைஞர்களிடம் அதிகரித்த ஆர்வம்
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சையத் ரியாஸ் அகமது SDM ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காஷ்மீரைச்சேர்ந்த ஐஐடி மாணவர்கள் குழு குந்தி மாவட்டத்தில் இன்டர்ன்ஷிப்காக வந்திருந்தனர், இந்நிலையில் பயிற்சிக்கு வந்த மாணவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டது, அதில் ஐஏஎஸ் அதிகாரி சையத் ரியாஸ் அகமது கலந்துகொண்டார். விருந்துக்கு பின்னர் மது விருந்து நடந்ததாக தெரிகிறது, அப்போது ஒரு ஐஐடி மாணவி மீது ஐஏஎஸ் அதிகாரிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்க: கமல் மகளுக்கு என்னாச்சு...! உடல்நலம் குறித்து பரவிய தகவல்... பதறிப்போய் வீடியோ மூலம் விளக்கமளித்த சுருதிஹாசன்
அப்போது அந்த மாணவியை தனியாக பேச அழைத்த ஐஏஎஸ் அதிகாரி அவரை மது அருந்த கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது, பின்னர் அந்தப் பெண்ணுக்கு மது ஊற்றி, தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதற்கு மறுக்கவே அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் அலறி அடித்து வெளியே ஓடி வந்தார், பின்னர் ஐஏஎஸ் அதிகாரி மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், பின்னர் மகிலா போலீசார் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ததோடு, நீதிமன்றத்திலும் பிரிவு 164 அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் மீது 354a மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் விசேஷ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாகவும், குந்தி மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி குந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரியாஸ் அகமது இந்திய நிர்வாக சேவையின் 2019 பேட்ச் அதிகாரி ஆவார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து டிஎஸ்பி அம்மன் குமார் கூறுகையில், இமாச்சல பிரதேசத்தின் ஐஐடி மாணவர் ஒருவர் மற்ற வகுப்பு தோழர்களுடன் பயிற்சிக்காக குந்தி மாவட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது ஐஏஎஸ் அதிகாரி சையத் ரியாஸ் அகமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனது குழுவினருக்கு ஜூலை 1ஆம் தேதி இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்தை வாய்ப்பாக பயன்படுத்தி ஐஐடி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதாவது ஜூலை 2ஆம் தேதி காலை மாணவி தனது சக நண்பர்களுடன் விருந்து முடிந்து வெளியேறும்போது ஐஏஎஸ் அதிகாரி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
வலுக்கட்டாயமாக அந்த மாணவிக்கு முத்தமிட்டு உடலுறவில் ஈடுபடும்படி வற்புறுத்தி பாலியல் கொடுமை செய்துள்ளார். இந்நிலையில்தான் அந்த மாணவி உள்ளூர் காவல் நிலையத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் புகார் கொடுத்தார், புகார் கொடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஜூலை 4 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.