நம்பி வெளியூர் போன கணவன்.. ஹவுஸ் ஓனரை வலைத்துப் போட்டு உல்லாசத்தில் மனைவி.. பிறகு நடந்த பயங்கரம்.

By Ezhilarasan Babu  |  First Published Aug 18, 2022, 5:28 PM IST

மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்ட வந்ததால் அந்த விரக்தியில் பெண்களை குறிவைத்து கணவன் அடித்து கொலை செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் கொட்டாவுரட்லா மண்டலத்தில் கொடூரம் நடந்துள்ளது. 


மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்ட வந்ததால் அந்த விரக்தியில் பெண்களை குறிவைத்து கணவன் அடித்து கொலை செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் கொட்டாவுரட்லா மண்டலத்தில் கொடூரம் நடந்துள்ளது. 

முழுவிவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் கோட்டாவுரட்லா மண்டலம் தர்மசாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தக ராம்பாபு (49)  2006 ஆம் ஆண்டு வாழ்வாதாரத்திற்காக குடும்பத்துடன் ஹைதராபாத் குடியேறினார்.

Tap to resize

Latest Videos

அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார். பின்னர் 2013 விசாகப்பட்டினம் வந்து அங்கு ஏர்போர்ட் நகரில் தங்கினார். பின்னர் 2015ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார்.

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க அவ்வப்போது ஹைதராபாத் சென்று வந்தார். இந்நிலையில்  கணவனைப் பிரிந்திருந்த ராம் பாபுவின் மனைவிக்கு ஹவுஸ் ஓனருடன் திருமணத்துக்கு புறம்பான தொடர்பு ஏற்பட்டது.

அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விவகாரம் ராம்பாபுவுக்கு தெரியவந்தது இதனால் மனைவியுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்தவர், 2018ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார், இதனால் மகன் மற்றும் மகளும் ராம்பாபு விட்டு பிரிந்தனர்.

மனைவி, பிள்ளைகளை இழந்த ராம்பாபு தனிமையில் தள்ளப்பட்டார், பல இடங்களில் வாடகை வீட்டில் வசித்து வந்தார், ஒருகட்டத்தில் சரியான வேலை இல்லாததால்  பேருந்து நிலையங்களில் தங்குவது, கோவில்களில் தங்குவது அங்கி கிடைக்கும் உணவை சாப்பிடுவது என காலம் கழித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் மனைவி தனக்கு செய்த துரோகத்தால் ராம்பாபுவுக்கு பெண்களின் மீது வெறுப்பு ஏற்பட்டது. பெண்களை அடித்து கொடூரமாக கொலை செய்ய முடிவு செய்தார், இதற்காக இரும்பு கம்பிகளை தயார் செய்த அவர், கடந்த மாதம் 9ம் தேதி பெண்துருத்தி பிருந்தாவன் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நல்லம்மா என்ற பெண்ணை அடித்துக் கொலை செய்தார்.

இதேபோல இந்த மாதம் 6ஆம் தேதி இரவு சீனமுஷ்டி வாடாசப்தகிரி நகரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றிவந்த லட்சுமி என்ற பெண்ணை கொடூரமாக தாக்கி படுகொலை செய்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் கொலைகளை அரங்கேற்ற திட்டமிட்டு இந்த கொலைகளை அவர் செய்து வந்தார்.

இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடீவி காட்சிகளின் அடிப்படையில் ராம்பாபுவை போலீசார் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  மனைவியின் துரோகம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் கொலைகளை அரங்கேற்றி வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

click me!