கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா ? ஆந்திராவில் அடிச்சு தூக்கும் விற்பனை !

By Raghupati RFirst Published Oct 12, 2022, 9:06 PM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில் கழுதை கறி அதிகளவு விற்கப்பட்டு வருவதை, அடிக்கடி காவல்துறை சோதனை செய்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கழுதை கறி விற்கப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பிறகு இதையடுத்து வந்த காவல்துறையினர் பாபட்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை செய்தனர். இதில் கழுதை கறி விற்பனை செய்யப்படுவது உறுதியானது.

இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?

அங்குள்ள உசிலிப்பேட்டை பகுதியில் 2 இடத்திலும், வேடபாலுத்தில் ஒரு இடத்திலும், சிராலா பகுதியில் ஒரு இடத்திலும் என 4 இடத்தில் ஒரு கிலோ கழுதை கறி ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. பிறகு கழுதை கறியை விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் இருந்து 400 கிலோ கழுதை கறியைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கழுதைகளை வெட்டி அறுப்பது சட்டவிரோத செயல் ஆகும். இந்த செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்படும். மேலும் கழுதை கறி வாங்குவதும் சட்டவிரோதமாகும்.

இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக

கழுதை கறியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கையில் பொதுமக்கள் பலர் வாங்கி சாப்பிடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !

click me!