மொபைல் முழுக்க 150 பெண்களின் ஆபாச வீடியோக்கள்.. பாத்ரூமில் எடுத்த போது வசமாக சிக்கிய சாஃப்ட்வேர் என்ஜினீயர்

By Raghupati R  |  First Published Jun 12, 2022, 3:45 PM IST

Nellai : நெல்லையில் சாஃப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் ஜன்னல் வழியாக 150 வீட்டு பெண்களின் 400 ஆபாச வீடியோக்களை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஆபாச வீடியோ

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை என்.எச்.காலனியில் ஒரு வீட்டின் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை ஒரு மர்ம நபர் மொபைல் போன் மூலம் வீடியோ எடுப்பதை பார்த்திருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண், உடனடியாக சத்தம் போட்டு கத்தி உள்ளார். இந்த அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி போட்டு வெளுத்து உள்ளனர்.  

Tap to resize

Latest Videos

இதில் அந்த மர்ம நபரின் தொலைப்பேசியை கைப்பற்றி பார்த்ததில் அதே தெருவைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீடியோ எடுத்த நபரை மீண்டும் அடித்து உதைத்து, முற்றிலும் நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில் அவர் பெயர் பால்ராபின்சன் (45 வயது) என்பது தெரிய வந்தது.

அதிர்ச்சி சம்பவம் 

சாஃப்ட்வேர் என்ஜினீயரான அவர் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்ததால் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இவர் என்.எச்.காலனியில் நாய், சிசிடிவிகள் இல்லாத வீடுகளை பகலில் நோட்டமிட்டவர், இரவானதும் அந்த வீட்டின் ஜன்னல், பாத்ரூம் வழியாக பெண்களை அபாசமாக வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. அவர் தொலைப்பேசியில் சுமார் 150 வீட்டு பெண்கள் தொடர்பான 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : ”மரக்கன்றுகளை வளர்த்தால் தங்க நாணயம் பரிசு !” அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட மாஸ் தகவல்

click me!