நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 9ம் வகுப்பு மாணவி கடத்தி, கற்பழிப்பு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பைக்காரா பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு தற்போது ஆண்டுத் தேர்வு நடைபெறுவதால் தினமும் காலையில் பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று காலை பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு காலையில் மாணவி பள்ளிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் பெற்றோரும் தங்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாலையில் பெற்றோர் பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மாணவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக பெற்றோர் வரும் முன்னரே மாணவி வீட்டிற்கு வந்து விடுவார். ஆனால், நேற்று நீண்ட நேரமாகியும் மாணவி வரவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் தங்களது உறவினர்கள், மாணவியின் தோழிகளின் வீடுகளில் தேடத் தொடங்கினர். இருப்பினும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
undefined
நாமக்கல்லில் தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த 3 வயது குழந்தை உயிரிழப்பு
மாணவியை அவரது பெற்றோர் தொடர்ந்து தேடிக் கொண்டிருந்த நிலையில், அங்கர்போர்டு பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது உடலில் பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் கிடப்பது தங்கள் மகள் தான் என்பதை உறுபதிப்படுத்திய பெற்றோர் தங்கள் மகளின் நிலையை கண்டு கதறி அழுதனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் மரணம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் உடனடியாக அப்பகுதியில் கூடி கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்டா காதலால் சீரழிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி; 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
இதனைத் தொடர்ந்து போராட்டக் காரர்களிடம் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் உடல் அருகே கார் நின்று கொண்டிருந்த நிலையில், மாணவியை காரில் கடத்தி கற்பழிப்பு செய்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.