Sep 20, 2017, 5:31 PM IST
இயக்குனர் நரசிம்மா, தெலுங்கு மற்றும் தமிழில் மிக பிரமாண்டமாக இயக்கியுள்ள திரைப்படம் 'யாகம்'. இந்தப் படத்தில் நெப்போலியன் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக நடிகை ஜெயப்பிரதா நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நெப்போலியன், தான் அமெரிக்காவில் இருந்து வந்து இந்தத் திரைப்படத்தில் நடித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், பல முறை நானாக இறங்கி வந்து வாய்ப்புகள் கேட்டும், ஷங்கர் கொடுக்கவில்லை, ஆனால் அவருடைய துணை இயக்குனர் எனக்கு வாய்ப்புக் கொடுத்தது மிகவும் பெருமையாக உள்ளது என நெகிழ்ச்சியோடு கூறினார்.