ஸ்டைலிஷ் அஜித், அசால்ட் வசனம்... ட்விட்டர், ஃபேஸ்புக்கை அலறவிட்ட விவேகம்...

May 11, 2017, 9:11 AM IST



ஒவ்வொருமுறை அஜித் பட டீஸர், டிரைலர் ரிலீஸாகும்போதும் ‘தல’ ரசிகர்களுக்கு அன்றைய தினம் சிவராத்தி தான் 'விவேகம்' பட டீஸருக்கும் காத்திருந்து ட்விட்டரை அதகள படுத்திவிட்டார்கள் அஜித் ரசிகர்கள். 

டீசர் ரிலீஸான முதல் அரைமணி நேரத்துக்குள் ஐம்பதாயிரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருந்த விவேகம் டீசர், இரவு ஒரு மணிக்கு ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது.

அடுத்த நான்கு மணி நேரங்கள், அதாவது காலை ஐந்து மணிக்கு 8,27,991 பார்வையாளர்களைக் கடந்தது. இது இந்திய சினிமாவில் இது ஒரு புதிய சாதனையாகத்தான் இருக்கும். சரி விவேகம்’ டீஸர் எப்படி?

சிவா, ஒரு அதி தீவிர ரசிகனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியும் என இந்த டீசரில் வெளிப்படுத்தியுள்ளார், அவரை எப்படியெல்லாம் பார்க்க வேண்டுமென நாள் முழுவதும் யோசித்து ஆசைப்படுகிறாரோ, அதேபோல அஜித்தை ரசித்து ரசித்து ஒவ்வொரு காட்சியையும் எடுத்திருப்பார் போல மனுஷன் சும்மா புகுந்து விளையாடிட்டார் போங்க...  

'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட..தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு சொன்னாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது' என்ற பஞ்ச டயலாக் பேசு அஜித்தின் குரலில் அந்த கம்பிரம் செம...

எப்பவும் போலதான் ஸ்டைலிஷ் அஜித் டபுள் கேம், துப்பாக்கி சுடுதல், டபுள் கெட்-அப் மற்றும் புஷ்-அப்ஸ், மிலிட்டரி கெட்டப்பில் அசால்ட்டாக நடந்து வருவது, கண்ணாடியை அணிவது, அமர்த்தலான குரலில் அசால்டாக வசனம் பேசுவது என மிரட்டியிருக்குக்கிறார்.

அதிலும், கடைசியில் வரும் அந்த பைக் காட்சியில் கிளாஸாகவும், மரத்தை பஞ்ச் பேக் போல நினைத்துக் குத்தும் காட்சியில் மாஸாகவும் தூள் கிளப்பியுள்ளார்.

அனிருத்தின் பிரம்மாண்டமான பின்னணி இசை, வெற்றியின் ஹாலிவுட் தரத்தில் கேமிரா, ரூபனின் கச்சிதமான எடிட்டிங், சிவாவின் வேற லெவல் மேக்கிங்...