Jan 6, 2019, 4:46 PM IST
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும், தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த இரு படங்களுக்கான முன் பதிவு தற்போது துவங்கி விட்டது.
இந்நிலையில், சென்னை அம்பத்தூர் திரையரங்கில் விஸ்வாசம் படத்தின் முன்பதிவிற்காக கவுண்டர் திறக்கப்பட்டதும், ரசிகர் அடித்து பிடித்து கொண்டும் கேட்டை உடைத்து கொண்டும் ஓடும் காட்சியை ஒருவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.