அமைதிப்படை ஸ்டைலில் முதலமைச்சராகும் விஜய்! கசிந்தது 'சர்க்கார்' பட தகவல்!

By Maruthu Pandi Santhosam  |  First Published Sep 8, 2018, 2:19 PM IST

AR முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, வேலைகள் முடிவு பெற்று தீபாவளி ரிலீசுக்காக போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


AR முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, வேலைகள் முடிவு பெற்று தீபாவளி ரிலீசுக்காக போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில்,  நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில்,  வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.  

Tap to resize

Latest Videos

undefined

இப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், அவ்வப்போது  இப்படத்தின் WorkingStills-னை படக்குழுவினர்  வெளியிட்டு சார்கார் Fever-னை ரசிகர்களிடையே புதிய டிரெண்டை உண்டாக்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அரசியல் தலைவராக, அதுவும் முதல்வராவது போல காட்சி இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

துப்பாக்கி,  கத்தி, என ஏற்கனவே ஹிட்டடித்த விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருமாகும், சர்க்கார் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தகவல் தற்போது பரவலாக பரவி வருவதால், ரசிகர்கள் சில அமைதிப்படை ஸ்டைலில் விஜய் முதல்வராக மாறிவிட்டார் என தனங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.  

click me!